நேற்று சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் தங்கி படித்து மற்றும் வேலை பார்த்து வந்த பலரும் சொந்த ஊருக்கு சென்று தீபாவளி கொண்டாடினர்.
அந்த வகையில், குன்றத்தூரில் உள்ள தனியார் முதியோர் இல்லத்துக்கு சென்ற தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் , அங்கிருந்த 50க்கும் மேற்பட்ட ஆதரவற்ற முதியோர்களுக்கு புத்தாடை, பட்டாசு மற்றும் இனிப்பு வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
அதன்பின்னர் , முதியோர்களுக்கு உணவு வழங்கும் முறை மற்றும் பராமரிப்பு பணிகள் ஆகியவற்றை குறித்து காப்பக உரிமையாளர்களிடம் கேட்டறிந்தார்.
இந்தாண்டு முதியோர் இல்லத்தில் தீபாவளி பண்டிகையை கொண்டாடியது பெரும் மகிழ்ச்சி கொடுப்பதாக கூறி காவல் ஆணையர் அமல்ராஜ் கூறியுள்ளார்.