fbpx

’கிரெடிட் கார்டில் இதற்கெல்லாம் இலவசமா’..? ’பணத்தை சேமிக்க இப்படி செய்யுங்க’..!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் கிரெடிட் கார்டு பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இது வைத்திருக்கும் பலருக்கும் அதன் அம்சங்கள் பற்றி எதுவும் முழுமையாக தெரிவதில்லை. கிரெடிட் கார்டு பயன்படுத்துவதன் மூலம் உங்களின் சாப்பாட்டு செலவில் ஆயிரக்கணக்கான ரூபாயை நீங்கள் சேமிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், பெரும்பாலான கிரெடிட் கார்டுகளில் இந்த அம்சம் உள்ளது. அதாவது காலை உணவு, மதியம் மற்றும் இரவு உணவிற்காக உங்கள் செலவை குறைக்க முடியும்.

’கிரெடிட் கார்டில் இதற்கெல்லாம் இலவசமா’..? ’பணத்தை சேமிக்க இப்படி செய்யுங்க’..!!

நீங்கள் விமானத்தில் பயணம் செய்கிறீர்கள் என்றால், விமான நிலைய ஓய்வறைகளில் இந்த அட்டை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். விமான நிலையத்தில் டீ, காஃபி, மதிய உணவு மற்றும் இரவு உணவு எவ்வளவு விலை உயர்ந்தது என்பதை அனைவரும் அறிந்திருப்பீர்கள். இந்த அட்டைகள் மூலம் நீங்கள் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான நிலையங்களின் ஓய்வறைகளில் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ள முடியும். நீங்கள் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு வைத்திருந்தால் அதனை பயன்படுத்தி கொள்ளலாம். கார்டு நெட்வொர்க் நிறுவனங்கள் ஓய்வறைகளுடன் ஒப்பந்தம் செய்திருப்பதால், இந்த அட்டை மூலம் விமான நிலைய ஓய்வறைகளுக்கு நீங்கள் இலவச நுழைவை பெற முடியும்.

’கிரெடிட் கார்டில் இதற்கெல்லாம் இலவசமா’..? ’பணத்தை சேமிக்க இப்படி செய்யுங்க’..!!

இதனால், கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் அதிக பலன்களை பெறலாம். அதிலும், ஒரு சில கார்டுகள் உள்நாட்டு விமான நிலையத்தில் மட்டுமே இந்த வசதியை வழங்குகிறது. மேலும், ஹெச்.டி.எஃப்.சி. வங்கி மில்லினியா டெபிட் கார்டு மிகவும் பிரபலமானது. அதனைப் போலவே ஐசிஐசிஐ கோரல் ரூபே கிரெடிட் கார்டு மற்றும் ஆக்ஸிஸ் பேங்க் கிரெடிட் கார்டு ஆகியவற்றில் பல அம்சங்கள் உள்ளன. இதுபோன்ற பல கிரெடிட் கார்டுகளிலும் நிறைய சலுகைகள் கிடைக்கின்றது. அதனால் வாடிக்கையாளர்கள் கார்டு வாங்கும் போதே அதனை தெரிந்து கொண்டு பயன்படுத்திக் கொள்வது நல்லது.

Chella

Next Post

வீட்டின் கதவுக்கு பிங்க் நிற பெயிண்ட் அடிச்சது குத்தமா..? ரூ.19 லட்சம் அபராதம்..!! ஏன் தெரியுமா..?

Tue Nov 1 , 2022
சொந்த வீட்டின் கதவுக்கு தனக்கு பிடித்த கலரில் பெயின்ட் அடித்ததற்காக உரிமையாளருக்கு 19 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா..? இந்த சம்பவம் ஸ்காட்லாந்து நாட்டின் ஈடின்பெர்கில் உள்ள வீட்டு உரிமையாளருக்கு நடந்திருக்கிறது. ஈடின்பெர்கின் நியூ டவுனில் உள்ள டிரம்மண்ட் பகுதியில் இருக்கிறது மிராண்டா டிக்சன் (48) என்ற பெண்ணின் பரம்பரை வீடு. 1981ஆம் ஆண்டு டிக்சனின் பெற்றோர் அந்த வீட்டை வாங்கியிருக்கிறார்கள். அவரது பெற்றோர் மறைவுக்கு […]
வீட்டின் கதவுக்கு பிங்க் நிற பெயிண்ட் அடிச்சது குத்தமா..? ரூ.19 லட்சம் அபராதம்..!! ஏன் தெரியுமா..?

You May Like