fbpx

பிக்பாஸ்-6 க்கு பின்னர் ஜி.பி.முத்துவுக்கு மவுசு கூடுகின்றது!

பிக்பாஸ்-6 நிகழ்ச்சியில் 2 வாரங்கள் மட்டுமே இருந்த ஜி.பி. முத்துவுக்கு வெளியில் வந்தவுடன் மவுசு கூடி வருகின்றது.

80ஸ் கிட்ஸ்கள் தொடங்கி 2கே கிட்ஸ் வரை அனைவருக்கும் பரிச்சயமான ஜிபி முத்து விடிய விடிய டிக் டாக் போட்டு இணையவாசிகளிடையே திடீர் பிரபலமானார். பாட்டு பாடி மிமிக்கிரி செய்து உயிரைக் கொடுத்து டிக் டாக்கில் பலரும் வீடியோக்களை போட்டுக் கொண்டிருக்க, எந்த மெனக்கடலும் இல்லாமல் சைனாக்காரர்களே பொறாமைப்படும் அளவுக்கு செல்வாக்காக வளர்ந்தார் ஜிபி முத்து.
யூ.டியூப் வழியாக டிக்டாக், ரீல் போன்றவற்றை செய்து வந்த இவர் தனது தனித்திறமையால் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார். பின்னர் பிக்பாஸ் 6-ல் முதல் போட்டியாளராக உள்ளே சென்றார். அதே நேரத்தில் குழந்தைகளின் நினைவால் வாடிய அவர் முதல் வாரத்திலேயே வெளியில் வந்தார். இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் அவர் பெறும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. யூ.டியூப்பில் மட்டும் மாதத்திற்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வருவதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் செலிபிரிட்டி வரிசையில் இவர் கடைதிறப்பு விழா போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றார். இதற்காக இவர் ரூ.50000 முதல் ரூ.1 லட்சம் வரை பெறுகின்றார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் மட்டும் ரூ.3 லட்சம் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

உடன்குடி கிராமத்தில் பிறந்த அவர் இன்று ‘ஆடி’ காரில் வளம் வருகிறார்.பாடவும் தெரியாது, ஆடவும் தெரியாது, சுட்டுப் போட்டாலும் நடிக்கத் தெரியாது. ஆனால் அவரது வீடியோக்கள் லட்ச கணக்கை தாண்டுகிறது என்றால் அவரது வெள்ளந்தி மனது தான் காரணம் என்கின்றனர்

Next Post

இன்ஸ்டாகிராமில் நட்பு, சினிமா மோகம்...கணவரின் பேச்சை கேட்காததால் கொலை !

Mon Nov 7 , 2022
இன்ஸ்டாகிராமில் நட்பாக பழகி வந்த நிலையில் இதை பிடிக்காத கணவர் மனைவியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரைச் சேர்ந்த சித்ரா (35). இவர் கணவர் அமிர்தலிங்கம். சித்ரா இன்ஸ்டாகிராமில் எப்போது ஆக்டிவாக இருப்பார். அடிக்கடி வீடியோ போடவது, புகைப்படம் அப்லோடு செய்வது என்று பிசியாக இருந்துவந்தார். அப்படியே இவரது ரசிர்களுடன் சாட் செய்வது என பொழுதை கழித்துள்ளார். அப்போதுதான் இன்ஸ்டா நண்பர் ஒருவர் பட வாய்ப்பு இருப்பதாக […]

You May Like