பொங்களுக்கு வாரிசு திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் சமூக வலைத்தலங்களில் ’வாரிசா’ ’துணிவா’ என்ற விவாதம் களைகட்டியுள்ளது.
இந்நிலையில் இருதரப்பு ரசிகர்களும் டுவிட்டர் சண்டையிட்டு வரும் நிலையில் விஜய் சினிமாவுக்கு வர அப்பாவே காரணம் என ஒரு தரப்பு வாதிட்டு வருகின்றது. மற்றொரு பக்கம் அவர் தனது தனித்திறமையால்தான் வளர்ந்துள்ளார் என ஒரு பக்கம் வாதிட்டு வருகின்றனர். இதனிடைய குழந்தை நட்சத்திரமாக ’வெற்றி’ என்ற திரைப்படத்தில் நடிகர் விஜய் அறிமுகமான காட்சிகள் வெளியிட்டு வைரலாகி வருகின்றது.
வாரிசு திரைப்படம் பிரபல தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க, இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியிட உள்ளார். பீஸ்ட் படத்தை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் வம்சி பைடம்பள்ளி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார். ராஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஸ்ரீகாந்த், யோகி பாபு, நடிகர் ஷாம், குஷ்பூ, சங்கீதா, சம்யுக்தா, ஜெயசுதா என எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்துள்ள இந்த படம் குடும்பப்பாங்கான படமாக உருவாகியுள்ளது.
இதே போல அஜித் வீடியோ ஒன்றை வெளியிட்டு யாரும் பார்த்திடாத ஒரு வீடியோவை ரசிகர்கள் வெளியிட்டு வருகின்றனர். சுரேஷ்-நதியா நடித்த ஒரு படத்தில் குழந்தை நட்சத்திரமாக அஜித் நடித்த காட்சிகள் வெளியிடப்பட்டு வருகின்றது.