fbpx

தமிழகமே… வரும் 18-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு வலுப்பெறக்கூடும்…! வானிலை மையம்

அடுத்த நான்கு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘கிழக்குத் திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் வரும் 19-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி,மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். இன்று அதிகபட்ச வெப்பநிலை 29 முதல் 30 டிகிரி செல்சியஸாக இருக்கும். தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக இன்று அல்லது நாளை தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக கூடும், இது மேற்கு – வடமேற்குத் திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் 18-ம் தேதி வாக்கில் வலுப்பெறக்கூடும்.

Vignesh

Next Post

ஆஹா...! ரயில்களில் வழங்கப்படும் உணவுப் பொருட்கள்...! மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவு...!

Wed Nov 16 , 2022
ரயில்களில் வழங்கப்படும் உணவுப் பொருட்களின் பட்டியல் தொகுப்பைத் தனிப்பயனாக்க ரயில்வே அமைச்சகம் ஐஆர்சிடிசி- க்கு நெகிழ்வுத் தன்மையை வழங்கியுள்ளது. ரயில்களில் உணவு வழங்கல் சேவைகளை மேம்படுத்துவதற்காக, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பாரம்பரிய உணவு வகைகள், பருவகால உணவு வகைகள், பண்டிகைக் கால உணவுகள், பயணிகளின் தேவை மற்றும் விருப்பத்துக்கேற்ற உணவுப் பொருட்கள் ஆகியவற்றை உள்ளடக்கும் வகையில் உணவுப் பட்டியல் தொகுப்பை இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகமான […]

You May Like