வடகிழக்கு பருவ மழை காரணமாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதில் மயிலாடுதுறை, சீர்காழி, திருவாரூர் போன்ற பகுதிகளில் ஆரஞ்ச் அலர்ட் அறிவிக்கப்பட்டு கனமழை பெய்தது. அதன் காரணமாக 100 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அதிக மழை பெய்தது.
இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை; மழை நீர் வெளியேற்றும் பணிகள் காரணமாக மாவட்ட ஆட்சியர் லலிதா அறிவிள்ளார்.
இதுகுறித்து அவர் தனது அறிவிப்பில்; சீர்காழி பகுதிகளில் உள்ள பள்ளிகள் முகாம்களாக செயல்பட்டு வருகின்றன. மேலும் சில பள்ளிகளை சீரமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதனால் சீர்காழி தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படுகிறது. எனவே, இன்று மாணவர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.