80ஸ் 90ஸ்களில் கொடிகட்டி பறந்த நடிகர், விஜயகாந்த் அவர்களுடன் ஒரு திரைப்படத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் நடித்த புகைப்படம் ஒன்று வைரலாகி வருகின்றது.
நடிகர் விஜயகாந்திற்கென தனி பாணி உண்டு. கம்பீரமான உடல்வாகு அனைத்து கதாப்பாத்திரங்களுக்கும் பொருத்தமாகிவிடுகின்றது. அனைவரும் அவரை கேப்டன் பிரபாகரன் திரைப்படத்திற்கு பின்னர் கேப்டன் என்றே அழைப்பார்கள். ஏராளமான திரைப்படங்களில் நடித்த இவர் பல கதாபாத்திரங்களில் பின்னி பெடலெடுத்துள்ளார். தற்போது இவர் சினிமாவை விட்டு விலகி இருந்தாலும் இன்றும் விஜயகாந்துக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். 1990ம் ஆண்டு பிரேமலதாவை திருமணம் செய்தார் விஜயகாந்த், இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.
தமிழகத்தின் முதல்வராக இருப்பவர் மு.க.ஸ்டாலின். இவர் ஆரம்பக்காலக்கட்டங்களில் திண்டுக்கல் தீர்ப்பு, நீதி தேவன் மயங்குகின்றான் மற்றும் நாளை நமது போன்ற திராவிட கொள்கைகளை முன் வைக்கும் நாடகங்களில் நடித்துள்ளார். இது பற்றி ஏற்கனவே நாம் அறிந்திருப்போம். தூர்தர்ஷனில் வெளியான குறிஞ்சி மலர் சீரியலில் அரவிந்தன் என்ற கதாபாத்திர்தில் மு.க.ஸ்டாலின் நடித்திருக்கின்றார்.
1987ல் கலைஞர் கதை வசனம் எழுதிய ஒரே ரத்தம் என்ற திரைப்படத்தில் மு.க.ஸ்டாலின் நடித்துள்ளார். 1988ம் ஆண்டு கலைஞர் வசனத்தில் மக்கள் ஆணையிட்டால் என்ற திரைப்படத்தில் விஜயகாந்த் உடன் இணைந்து மு.க.ஸ்டாலின் நடித்துள்ளார். இந்த தகவல் தற்போது வெளி வந்தவுடன் மு.க.ஸ்டாலின் விஜயகாந்த் உடன் இணைந்து படத்தில் நடித்துள்ளாரா என மக்கள் வியப்பாக பார்க்கின்றனர். இந்த தகவல் இணையதளங்களில் வைரலாகி வருகின்றது.