ஓடிக்கொண்டிருந்த லாரி மீது உற்சாகமாக நடமாடிய இளைஞர் அங்கிருந்த பாலத்தை கவனிக்காததால் அதில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் ஹுஸ்டன் சாலை அமைந்துள்ளது. அங்கு பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அவ்வழியாக சென்று கொண்டிருந்த லாரியின் டாப்பில் ஏறி நின்று இளைஞர் ஒருவர் நடனமாடிக்கொண்டிருந்தார். அப்போது ஈஸ்டெக்ஸ் ஃப்ரிவே என்ற பாலத்தின் அருகே சென்று கொண்டிருந்தபோது அந்த இளைஞர் அதை கவனிக்காமல் இருந்துள்ளார். பாலத்தின் மீது வேகமாக மோதி சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
இந்த காட்சிகள் அங்கிருந் ஓட்டுனர் ஒருவரால் பதிவு செய்யப்பட்டது. ரயில் மீது நடிகர் ஷாருக்கான் ’தக்க தைய தையா’ என நடனமாடுவார்.அந்த பாடல் நாடுமுழுவதும் மிகவும் பிரபலமானது. கிட்டத்தட்ட அதே பாணியில் மிக உயரமான 8 சக்கரங்கள் கொண்ட ஒரு வாகனத்தின் மீது ஏறிநின்று இந்த இளைஞர் நடனமாடி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சினிமா பாணியில் இது போன்ற சாகசங்களை தவிர்க்க வேண்டும் என்பது ஆர்வலர்களின் கருத்து.