fbpx

சமையல் அறையை ஈஸியா, சூப்பரா க்ளீன் பன்ன செம்ம ஐடியா.. இது.!

சமையல் அறை என்றாலே எண்ணெய் கரை போகாமல் அழுக்காகவே காணப்படுகிறது. பலமுறை என்ன செய்தாலும் அந்த கரைகள் அகலுவதில்லை. ஆனால் இந்த இரண்டு பொருட்கள் இருந்தால் போதும் உடனடியாக சமையல் அறை பளிச்சென்று ஆகிவிடும். அதுமட்டுமல்லாமல் பழைய பாத்திரங்களையும் புதிது போன்று மாற்றிவிடும். பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை சேர்ந்த கலவையானது ஆக்ஸிஜனேற்ற பண்புகளையும் காரத்தன்மையையும் கொண்டுள்ளது. 

சமையல் அறை மேற்பரப்பு சுத்தம் செய்யும் வழிமுறைகள் :

சிறிதளவு பேக்கிங் சோடா மற்றும் இதனுடன் எலுமிச்சை சாற்றை எடுத்து தண்ணீரில் கலந்து, தரையில் தெளித்து கொள்ள வேண்டும். பிறகு சிறிது நேரம் கழித்து, வெது வெதுப்பான நீரினை கொண்டு துடைத்துக்கொள்ளலாம். இப்பொழுது அதன் பளபளவென மாறியிருப்பதை காணலாம். இந்த கரைசலின் கடுமையான வாசனை வெளிவருவதால் பூச்சிகளை அண்ட விடாமல் அகற்றி வைக்கிறது.

பழை பாத்திரங்களை சுத்தம் செய்யும் வழிமுறைகள் :

பெரிய பாத்திரம் ஒன்றில் வெதுவெதுப்பான நீரினை எடுத்து கொண்டு அதனுடன் சிறிதளவு சமையல் சோடா மற்றும் எலுமிச்சை சாறு கலந்து அந்த கரைசலை எடுத்து கொள்ள வேண்டும். மேலும் அழுக்கு படிந்த பாத்திரங்களை மற்றும் கலைப்பொருட்களை அந்த கரைசலில் முழுவதுமாக நனைத்துக் கொள்ள வேண்டும். சிறிது நேரம் சென்ற பின்பு வெளியே எடுத்து கழுவினால் அதன் வித்தியாசத்தைப் பார்க்கலாம்.

கிரீஸ் கறை நீங்க செய்யும் வழிமுறைகள்

சமையல் அறையின் அடுப்பைச் சுற்றி பல கிரீஸ் படிவுகள் காணப்படும். இதனை சுத்தம் செய்ய பேக்கிங் சோடாவை ஒரு பேஸ்ட் போல் செய்து ஒருதுளி எலுமிச்சை சாறுடன் கலந்து, கிரீஸ் உள்ள இடத்தில் தடவி ஒரு மணி நேரம் வைத்திருக்க வேண்டும். பிறகு சிறிது சோப்பு அதனுடன் வெதுவெதுப்பான நீரினை கொண்டு துடைத்து எடுக்கவும். இப்போது அந்த கரை நீங்கியுள்ளதை காணலாம். 

Rupa

Next Post

எல்லாம் அலர்டா இருங்க மக்களே...! இன்று இந்த 11 மாவட்டத்தில் கனமழை...! வானிலை மையம் எச்சரிக்கை...!

Wed Feb 1 , 2023
தமிழகத்தில் 4-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கை- திரிகோணமலையில் இருந்து கிழக்கே சுமார் 340 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலில் இருந்து கிழக்கு – தென்கிழக்கே சுமார் 560 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது இன்று […]

You May Like