மேஷம்: வாழ்க்கைக்கு தேவையான சில முக்கிய தீர்மானங்களை எடுப்பார்கள். மேலும் பணம் கடன் வாங்குவது கொடுப்பது என எந்த பரிவர்த்தனையையும் இன்று மேற்கொள்ள வேண்டாம். இளைஞர்கள் செய்யும் தொழிலில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மேலும் வேலைப்பளு அதிகமாக இருக்க கூடும்.
ரிஷபம் : ஆன்மீக வழிபாடு மன மகிழ்ச்சியை இன்றைய நாளில் தரும். சொத்துகள் தொடர்பான தீர்வு வெற்றி தரும். நிதி முதலீடுகள் தொடர்பான விஷயங்களில் எவ்வித முடிவையும் எடுக்க வேண்டாம். தொழில் வியாபாரத்தில் சற்று சாதகமான நிலை ஏற்படும்.
மிதுனம் : மனதில் புதிய திட்டங்கள் உருவாகி வரும். மேலும், உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தருணம் உருவாகும். சகோதரர்களுடன் தகராறு ஏற்பட வாய்ப்பு உள்ளது. குழந்தைகளின் பராமரிப்பில் கவனம் செலுத்துவது அவசியமாக இருக்கிறது.
கடகம்: நினைத்த கனவுகள் நனவாகும். வாகனம் பழுதடைவதால் பெரும் செலவுகள் ஏற்படும் நிலை உண்டாகும். தொழிற்துறையில் எடுக்கும் உறுதியான முடிவுகள் வெற்றி பெரும்.
சிம்மம்: சொந்தமான முயற்சிகள் சாதகமான பலனைத் தரும். குடும்பத்தில் மற்றும் சமூகத்தில் அபிப்பிராயம் கூடும். வாகனம் ஓட்டும் போது போக்குவரத்து குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பணிகள் விரைவாக விறுவிறுப்படையும்.
கன்னி: வெற்றி தேடி வரும். எந்த முக்கிய பிரச்சனைக்கும் தீர்வு காணலாம். வருமானத்துடன் கூடிய செலவும் அதிகரிக்கும். உங்களின் எந்த திட்டத்தையும் யாரிடமும் தெரிவிக்க வேண்டாம். மேலும் கணவன்-மனைவி உறவு இனிமையாக இருக்கும்.
துலாம்: எந்தவொரு குடும்பப் பிரச்சினையிலும் உங்கள் இருப்பு முக்கியமாக இருக்கும். பிற்பகலில் கிரக நிலை தலைகீழாக மாறுவதால் ஒரு சில எதிர்மறை எண்ணங்கள் மனதில் தோன்றலாம். வீட்டில் உள்ள பெரியவரின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
விருச்சிகம்: வியாபாரத்திலும் மற்றும் வீட்டிற்கும் நல்ல இணக்கம் அமையும். ஆன்மிக நடவடிக்கைகளில் ஆர்வம் அதிகரித்து கோவிலுக்கு சென்று வரும் சூழ்நிலை ஏற்படும். பண பரிவர்த்தனை தொடர்பான பல நஷ்டம் ஏற்படலாம். இதனையடுத்து எந்த ஒரு புதிய வேலையையும் திடீரென தொடங்காமல் இருப்பது நல்லது.
தனுசு: உங்கள் தொடர்பின் நண்பர்கள் எல்லை விரிவடையும். உங்கள் தனிப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். குடும்ப உறுப்பினர்களுடன் தனது நேரத்தை செலவிடுவது மன அமைதி தரும். இயந்திரம் மற்றும் உணவு தொடர்பான வியாபாரம் வெற்றி தரும் . கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
மகரம்: நாள் ஆரம்பம் மிகவும் இனிமையாக இருக்க கூடும். பிற்காலத்தில் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி திட்டமிடுவீர்கள். உணர்ச்சிவசப்பட்டு உடனடியாக தவறான முடிவை எடுக்க நேரிடும். எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் குடும்ப உறுப்பினர்களை கலந்தாலோசித்து நிதானமாக முடிவெடுப்பது நல்லது.
கும்பம்: புதிதாக திட்டங்களைத் தொடங்குவதற்கு முன் ஒருமுறைக்கு பலமுறை யோசித்துப் பார்க்க வேண்டும். தொலைபேசி மூலம் வரும சில முக்கிய தகவல் வந்து சேரும். விரக்தியில் எதிர்மறை எண்ணம் தொடர்பாக மனதில் வரலாம். பணியிடத்தில் பிரச்சனைகளை கையாள அதிக அனுபவம் வாய்ந்தவர்களின் ஆலோசனை பலன் கிடைக்கும்.
மீனம்: வீட்டு பராமரிப்பு தொடர்பான பணிகளில் சிறப்பான ஆதரவு உண்டாகும். குழந்தைகளின் செயல்களில் ஆர்வம் காட்டுவது மற்றும் நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் அமையும். வெற்றியால், சிலர் உங்கள் மீது பொறாமைப்படலாம். இதனிடையே பணியிடத்தில் உங்கள் கடினமான உழைப்புக்கு ஏற்ப நற்பலன்கள் கிடைக்கும்.