நீங்கள் புக் செய்த ரயில் லேட் ஆனால் உங்களுக்கு அது இலவசம்!!

ரயில் பிரயாணத்தின்போது நீங்கள் முன்பதிவு செய்து காத்திருக்கும் போது ரயில் தாமதமாக வந்தால் அதற்குண்டான பலனை நீங்கள் பெறுவீர்கள்.

மக்களுக்கு நீண்ட தூர பயணங்களுக்கு உதவியாக இருப்பது, ரயில்கள் தான். பயணிகள் முன்பதிவு செய்து கொள்வதற்கும் , தவிர்க்க முடியாத காரணங்களுக்காக பயணத்திற்கான டிக்கெட்டை ரத்து செய்யவும் பல வழிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், முன்பதிவு செய்த பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் சிறப்பான வாய்ப்பு அளிக்கின்றது. இதனை பற்றி பலருக்கும் தெரியாமல் உள்ளது.

குறிப்பிட்ட நேரத்தில் வர வேண்டிய ரயில் 2 மணி நேரங்கள் தாமதமாக வந்தால் பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் உணவு வழங்க வேண்டியது கட்டாயமாகும். 2 மணி நேரம் தாமதமானால் இந்த சலுகை செல்லுபடியாகாது. அதற்கு மேல் தாமதம் ஏற்பட்டால்,விதிமுறைகளின் படி, சதாப்தி, ராஜ்தானி, துரந்தோ போன்ற விரைவு ரயில்களில் பணிகளுக்கு அளிக்கப்படும் உணவுகளுக்கான பட்டியலும் வெளியாகியுள்ளது.

காலை உணவிற்கு டீ, காபி, 2 பிஸ்கட், மாலையில் டீ, காபி, 4 பிரட் துண்டுகள்,மதிய உணவில் ரைஸ், பருப்பு, ஊறுகாய் இரவு உணவில் 7 பூரிகள், வெஜ் அல்லது உருளைக்கிழங்கு, ஊறுகாய் பாக்கெட் கொடுக்கப்படம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.ஆர்.சி.டி.சி.ன். இந்த பலனை பயணிகள் முழு உரிமையோடு பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

’அவரு ஒரு கோமாளி… அவரை பற்றி என்னிடம் கேட்க வேண்டாம்’-கடுப்பான அமைச்சர் செந்தில்பாலாஜி…

Sun Oct 30 , 2022
பா.ஜ.க. மாநிலத் தலைவர் ஒரு அரசியல் கோமாளிஅவரைப் பற்றி என்னிடம் கேள்விகள் கேட்க வேண்டாம் என கடுப்பாக பதில் அளித்துள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி. கோவை மாநகரில் பல்வேறு பகுதிகளில் சீரமைப்பு பணிகளை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், கோவை கார் வெடிப்பு நிகழ்வு நடந்த பின்னர் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து மக்கள் நிம்மதியான வாழ்க்கை வாழ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் […]
’பதவி வந்தவுடன் இந்த வேலையை மட்டும் செய்யக்கூடாது’..!! யாரை தாக்கிப் பேசுகிறார் செந்தில் பாலாஜி..?

You May Like