fbpx

ஒரே ஜாலி…! 1-ம் தேதி முதல் மாணவர்கள் பள்ளி செல்லும் நேரத்தில் மாற்றம்…! அரசு அதிரடி அறிவிப்பு..!

ஹரியானா மாநிலத்தில் பள்ளிக் கல்வி இயக்குனரகம் பள்ளி நேரத்தை மாற்றியுள்ளது. இந்த மாற்றம் டிசம்பர் 01, 2022 முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் படி, ஒரே ஷிப்டில் இயங்கும் ஹரியானா பள்ளிகள் காலை 09:30 மணி முதல் மாலை 03:30 மணி வரையிலும், இரண்டு ஷிப்டுகளில் இயங்கும் பள்ளிகள் ஷிப்ட் 1 க்கு காலை 07:55 முதல் மதியம் 12:30 வரையிலும், ஷிப்ட் 2 க்கு 12 முதல் மாலை 05:15 வரை பள்ளிகள் இங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது

ஹரியானா அரசின் தகவல், மக்கள் தொடர்பு மற்றும் மொழிகள் துறை இயக்குனரகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பள்ளி நேரத்தை மாற்ற போவதாக தெரிவித்துள்ளது. அந்த ட்வீட்களில், “அரியானா அரசு டிசம்பர் 1 முதல் பள்ளிகளின் நேரத்தை அரசு மாற்றியுள்ளது. ஒற்றை ஷிப்ட் பள்ளிகளின் நேரம் காலை 09:30 முதல் மாலை 03:30 வரை இருக்கும். மறுபுறம், இரட்டை ஷிப்ட் பள்ளிகளில், நேரம் முதல் ஷிப்ட் காலை 07:55 முதல் மதியம் 12:30 வரையிலும், இரண்டாவது ஷிப்ட் மதியம் 12:40 முதல் மாலை 05:15 வரையிலும் இருக்கும் என கூறியுள்ளது.

Vignesh

Next Post

தென் தமிழகத்தில் இடியுடன் கூடிய லேசான மழை...! சென்னை வானிலை மையம் கணிப்பு...!

Fri Nov 25 , 2022
தென் தமிழகத்தில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி‌ குறிப்பில்; தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழகத்தின் மேல் நகர்ந்து நேற்று காலை வலுவிழந்தது. வட தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று முதல் 28-ம் தேதி […]

You May Like