ஈரோடு மாவட்ட பகுதியில் உள்ள தாளவாடியில் தனது தாயுடன் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வயிறு வலிப்பதாக கூறிய நிலையில் தாய் சத்தியமங்கலத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு மகளை அழைத்து சென்றுள்ளார்.
மருத்துவமனையில் சிறுமியை பரிசோதனை செய்தபோது மருத்துவர் சிறுமி 4 மாத கர்ப்பிணியாக உள்ளதாக கூறியுள்ளார். இதனை தொடர்ந்து அதிர்ச்சி அடைந்த தாய் தனது மகளிடம் தனிபட்ட முறையில் விசாரித்துள்ளார். அப்போது தாய்க்கு அதிர்ச்சி செய்தி காத்திருந்தது.
கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் கர்நாடக மாநில பகுதியில் இருக்கும் பாட்டி வீட்டிற்கு சிறுமி சென்றுள்ளார். இந்த நிலையில் ஆசை வார்த்தைகள் கூறி அதே பகுதியில் வசிக்கும் சித்தராஜ்(28) என்ற இளைஞர் சிறுமியை தனிமையில் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இது பற்றி சிறுமியின் தாய் சத்தியமங்கலம் பகுதியில் இருக்கும் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிந்த போலீசார் அந்த இளைஞரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.