fbpx

திருமணம் எப்போது? பரபரப்பை ஏற்படுத்திய நடிகை அஞ்சலி!

நடிகை அஞ்சலி இயக்குனர் ராம் இயக்கிய கற்றது தமிழ் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரை உலகில் நுழைந்து இருந்தாலும் அங்காடித்தெரு திரைப்படம் தான் அவருக்கு ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.

இவர் அந்த திரைப்படத்திலிருந்து தொடர்ந்து அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக மாறினார். தற்சமயம் நடிகை அஞ்சலி தன்னுடைய திருமணம் தொடர்பாக பதில் வழங்கியுள்ளார்.

அதாவது, நான் இயக்குனர் ராம் சாரின் மாணவி என்று நான் பெருமையாக சொல்லிக் கொள்வேன். அவருக்காக நடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்தின் போதும் அவரிடம் இருந்து பல விஷயங்களை கற்றுக் கொள்கிறேன். புதிதாக சினிமாவுக்கு வருபவர்கள் தைரியமாக இருக்க வேண்டும். சற்றே பலவீனமாக இருந்தால் கூட சினிமாவில் தாக்குப் பிடிக்க இயலாது என்று தெரிவித்திருக்கிறார் அஞ்சலி.

மேலும் காதல் என்பது ஒரு அழகான உணவு அதனை சரியாக தேர்ந்தெடுக்க வேண்டும். என்னுடைய திருமணத்தை பற்றி வீட்டில் கேள்வி எழுப்புவார்கள். ஆனால் என்னுடைய திரைதுறை வாழ்க்கையை புரிந்து கொண்டு எனக்கு அழுத்தம் தரமாட்டார்கள். முன்பெல்லாம் திருமணம் முடிவடைந்தால் நடிகைகள் நடிப்பதற்கு வரமாட்டார்கள். தற்போது அந்த நிலை முற்றிலுமாக மாறிவிட்டது.

இப்போதுள்ள சூழ்நிலையில், என்னுடைய திருமணம் தொடர்பாக நான் யோசித்துக் கூட பார்க்கவில்லை. ஆனால் நிச்சயமாக திருமணம் செய்து கொள்வேன் திருமணத்தை ரகசியமாக வைக்க மாட்டேன், எல்லோருக்கும் தெரிவிப்பேன் என்று தன்னுடைய பேட்டியில் அஞ்சலி கூறியிருக்கிறார்.

Next Post

இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு!!! மாண்டஸ் புயல் எதிரொலி...

Fri Dec 9 , 2022
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் வலுப்பெற்று தீவிர புயலாக மாறியது. இந்த மாண்டஸ் புயல் புதுவை – ஸ்ரீஹரிகோட்டா இடையே இன்று நள்ளிரவு கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 65 முதல் 75 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசப்படும், அவ்வப்போது 85 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீசப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வட தமிழகம் புதுவை மற்றும் தெற்கு ஆந்திராவில் இன்று […]

You May Like