fbpx

கட்சிப் பணிக்காக நியாய விலை பணியாளரிடம் பணம் கேட்டு தொல்லை செய்த வி.சி.க பிரமுகர்!

ஒரு அரசியல் கட்சியில் ஒருவர் இணைந்து பொதுநலப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று நினைத்தால் அவருக்கு முதலில் தேவைப்படுவது பணம் மட்டும்தான்.என்னதான் சேவை செய்ய வேண்டும் என்ற மனப்பான்மை இருந்தாலும் கூட பணம் இருந்தால் மட்டுமே அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரையில் அரசியலில் நிலைத்து நிற்க முடியும். இதுதான் காலகாலமாக நடைபெற்று வருகிறது.

சாதாரண தொண்டர்களாக இருக்கின்ற யாரும் கட்சியின் முக்கிய பொறுப்புகளில் இருப்பதில்லை. அதேபோல கட்சிகளின் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் நபர்கள் சாதாரண பாமர மக்களாக இருப்பதில்லை.

அந்த வகையில் கரூரில் ரேஷன் கடை பணியாளரிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரமுகர் ஒருவர் பணம் கேட்டு தொந்தரவு செய்திருக்கிறார். கரூர் மாவட்டத்தை அடுத்திருக்கின்ற கொழுந்தனூர் அருகே உள்ள அம்மன் நகர் என்ற பகுதியில் இருக்கின்ற ரேஷன் கடை ஒன்றில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் பகலவன் என்ற பாஸ்கரன் போஸ்டர் ஓட்டுவதற்கு பணம் வேண்டும் என்று கேட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் இதற்கு அந்த நியாய விலை கடை பணியாளரை தன்னிடம் பணம் இல்லை என்று தெரிவித்திருக்கிறார். இதற்கு அந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி அப்படி என்றால் கையில் இருக்கின்ற பணத்தையாவது கொடு என்று நியாய விலை கடையில் அமர்ந்து அடாவடி செய்யும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அந்த காணொளியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரமுகர் சுவரொட்டி ஓட்ட வேண்டும், எதுவும் செய்ய முடியவில்லை. நான் மிகவும் சிரமத்தில் உள்ளேன், சரி கையில் இருக்கும் பணத்தை கொடு என்று அந்த காணொளியில் ரேஷன் கடை பணியாளரிடம் கேட்கிறார்.

அதற்கு அந்த நியாய விலை கடை பணியாளரோ, என்னிடம் எதுவுமே இல்லை. என்னால் எதுவுமே செய்ய முடியாது. கோபித்துக் கொள்ள வேண்டாம். முன்பிருந்ததைப் போல தற்போது இல்லை சுந்தர் பாயை வைத்துக்கொண்டு எதுவும் செய்ய இயலாது என்று தெரிவிக்கிறார். இந்த காணொளி தற்போது இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

Next Post

சிறைகளில் காவலர்களை தாக்கும் கைதிகள்! சிறைத்துறை எடுத்த அதிரடி முடிவு!

Fri Dec 9 , 2022
முன்பெல்லாம் ரவுடிகள் வெளியே இருக்கும் சில சாதாரண மக்களை தாக்கி விட்டு சிறைக்குச் செல்வார்கள். அங்கே காவலர்களுக்கு பயந்து நடுங்கி, ஒடுங்கி இருப்பார்கள். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் சிறையில் இருக்கக்கூடிய கைதிகள் காவலர்களையே தாக்கும் சம்பவங்கள் தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே, அவ்வப்போது நடைபெற்று வருகிறது. ஆனால் இப்படிப்பட்டவர்களை சமாளிப்பதற்கு காவல்துறையினரே தினறித்தான் போகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.அத்துடன் தமிழக சிறைகளில் நடைபெறும் விதிமீறல்கள், அத்துமீறும் செயல்கள் உள்ளிட்டவை வெளியே தெரியாமல் மூடி […]
இதுக்கா இப்படியொரு தண்டனை...மகனுக்கு சூடு போட்டு; கண்ணில் மிளகாய் பொடியை தூவிய கொடூர தாய்...கேரளாவில் பயங்கரம்!

You May Like