வரதட்சணை கேட்டு மிரட்டிய கணவர்…..! போலீசாரிடம் புகார் வழங்கிய மனைவி……!

ஈரோடு மாவட்டம் மடச்சூரை சேர்ந்த லிவிங்ஸ்டன் ஜெயபால் 30 என்ற நபருக்கும், திண்டுக்கல் மாவட்டம் பொம்ம பட்டியை சேர்ந்த அபிதா (23)என்ற பெண்ணுக்கும் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது.

லிவிங்ஸ்டன் ஜெயபால் திருமணம் நடைபெற்றபோது தான் ஒரு மத்திய அரசு ஊழியர், மத்திய அரசின் உணவு பாதுகாப்பு துறை அதிகாரியாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார். இதை நம்பிய அபிதாவின் குடும்பத்தை சார்ந்தவர்கள் லிவிங்ஸ்டனுக்கு 1 லட்சம் ரூபாயும், 20 பவுன் நகையும் வரதட்சணையாக கொடுத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில், கணவன், மனைவி இருவரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்த நிலையில், பொய் என்பது நிச்சயமாக என்றாவது ஒருநாள் வெளிச்சத்திற்கு வரும் என்று சொல்வதைப் போல, ஜெயபால் மத்திய அரசு அதிகாரி இல்லை என்பது அபிதாவிற்கு தெரியவந்தது. அதனால் ஆத்திரம் கொண்ட அபிதா கணவரிடம் இது தொடர்பாக கேட்டு சண்டையிட்டுள்ளார்.

அப்போது லிவிங்ஸ்டன் ஜெயபால் நாம் இருவரும் ஒன்றாக இருந்த படுக்கை அறை காட்சிகளை வீடியோ கால் மூலமாக பதிவு செய்திருப்பதாகவும், இது தொடர்பாக என்னிடம் கேள்வி எழுப்பினால் அந்த காட்சிகளை வெளியிட்டு விடுவேன் என்றும் மிரட்டி இருக்கிறார்.

இதை கேட்டு அதிர்ச்சிக்குள்ளான அபிதா ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்து காவல் நிலையத்திற்கு சென்று புகார் வழங்கினார். இந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு காவல்துறையினர் ஜெயபாலை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்

Next Post

காதலிக்க மறுத்ததால் பள்ளி மாணவியின் வீட்டின் முன்பு குண்டு வீசிய இளைஞர்…..! அதிரடியாக கைது செய்த காவல்துறையினர்…..!

Tue Feb 14 , 2023
மதுரை மேல அனுப்பானடி வடிவேலன் தெருவில் மண்பானை தொழில் செய்து வரும் சரவணகுமார் என்பவரின் குடும்பமும், மருதுபாண்டி என்பவரின் குடும்பமும் சென்ற ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் நேர் எதிர் வீட்டில் வசித்து வந்தார்கள். இந்த நிலையில், சரவணகுமாரின் 15 வயது மகளுக்கு மருது பாண்டியின் மகனான மணிரத்தினம் (23) என்பவர் காதல் தொந்தரவு வழங்கியிருக்கிறார் இதனை அறிந்து கொண்ட மாணவியின் தந்தை சரவணகுமார் இந்த விவகாரத்தை தொடக்கத்திலேயே கண்டிக்கும் விதமாக […]

You May Like