fbpx

வெறும் வயிற்றில் பூண்டை சாப்பிட்டு வருவதால் கிடைக்கும் நன்மைகள்..!

சமையலுக்கு நாம் பயன்படுத்தும் பூண்டு நமது உடலுக்கு நன்மை தருகிறது என்று காணலாம். ஆண்களுக்கு பூண்டு சாப்பிடுவது  பாலியல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

பூண்டில் உள்ள சத்துக்களான விட்டமின் சி, ஆன்டி ஆக்சிடன்டுகள், பி6 மற்றும் கனிமங்கள் ஆகியவை உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. சில ஆய்வுகளில் பூண்டை பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவதால், சக்தி வாய்ந்த ஆன்டி-பயாடிக்காக செயல்பட்டுகிறது. 

இரத்த அழுத்தம் இருந்தால் அதிலிருந்து நிவாரணம் தருவதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. உடலில் இருக்கும் வியர்வையை பெருக்கி, உடற்சக்தியை அதிகப்படுத்துகிறது. மேலும், தாய்பாலை விருத்தி செய்யவும், சளி, சுவாச தடையை நீக்குகிறது. 

அத்துடன் ரத்த கொதிப்பை தணிக்கும், ஜீரண சக்தியை அபிவிருத்தி செய்யும், உடல் பருமனையும், ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்க உதவுகிறது. இதனை தொடர்ந்து பச்சை பூண்டை சாப்பிட்டு வருவதால், கல்லீரல் மற்றும் சிறுநீர்ப்பை சரியாக்குகிறது. வயிற்று பிரச்சனைகளை நீக்க வழிவகுக்கிறது. 

பசியின்மை மற்றும் அஜீரணம் போன்ற பிரச்சனைகள் நீங்குகிறது. இதனையடுத்து பச்சை பூண்டு மன அழுத்தத்தையும் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. அலுவலகத்தில் அதிக பணிபுரிபவர்கள் தினமும் பச்சை பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.

Rupa

Next Post

சிறுநீரக கற்கள் முதல் சிறுநீரக இழப்பு போன்ற பல பிரச்சினைகளை தடுக்க இந்த ஜூஸ் போதும்!!!

Tue Dec 13 , 2022
சிறுநீரகத்தை ஒழுங்காக கவனிக்காமல் விட்டு விட்டால் சிறுநீரக கற்கள் முதல் சிறுநீரக இழப்பு வரை பல பிரச்சினைகளை நாம் சந்திக்க நேரிடுகிறது. அதனால் இங்கே சிறுநீரகத்தை பராமரிக்க உதவும் மூன்று ஜூஸ் வகைகள் குறித்து அறிந்து கொள்வோம். சிறுநீரகத்தில் கற்கள் இருக்கும் நபர்களுக்கு தக்காளி ஜூஸ் மிகவும் ஏற்றது. இரண்டு தக்காளியை எடுத்து கொண்டு அதிலுள்ள விதைகளை அகற்ற வேண்டும். அதன் பிறகு தக்காளியை நறுக்கி ஒரு மிக்ஸி ஜாரில் […]

You May Like