வீட்டிற்கு பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர்கள் பெற்ற நுகர்வோர் 800 ரூபாய்க்கு மேல் செலுத்த வேண்டியுள்ளது. கடந்த சில நாட்களாக சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் Paytm ஒரு அற்புதமான சலுகையை கொண்டு வந்துள்ளது, அதன் படி Paytm மூலம் உங்களின் முதல் கேஸ் சிலிண்டரை முன்பதிவு செய்தால் ரூ.1000 வரை கேஷ்பேக் கிடைக்கும். நீங்கள் பணம் செலுத்தியவுடன் ஸ்கிராட்ச் கார்டு வழங்கப்படும்.
எப்படி முன்பதிவு செய்வது…?
உங்கள் சிலிண்டரை புக் செய்ய வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம். மேலும் சிலிண்டரை ஆன்லைனில் பதிவு செய்யலாம்.
முதலில் Paytm செயலியை பதிவிறக்கவும். பின்னர் உள்நுழையவும். புக் கேஸ் சிலிண்டர் விருப்பத்தை கிளிக் செய்யவும்.அடுத்து பாரத் கேஸ், ஹெச்பி கேஸ் மற்றும் இண்டேன் கேஸ் ஆகியவற்றிலிருந்து உங்கள் எரிவாயு விருப்பத்தைத் தேர்வுசெய்யவும். அடுத்து பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் உங்கள் LPG ஐடியை உள்ளிடவும்.பின்னர் Proceed என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.அதன் பிறகு Apply Promocode என்பதை கிளிக் செய்யவும்.
அதில் நீங்கள் உங்கள் விருப்பப்படி சலுகைகளைப் பெறலாம். விளம்பர குறியீட்டை உள்ளிட்ட பிறகு, நீங்கள் பணம் செலுத்தி கேஷ்பேக் பெற வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சமாக ரூ.1000 மற்றும் குறைந்தபட்சம் ரூ.5 கேஷ்பேக் கிடைக்கும்.இதற்கு GAS1000 என்ற விளம்பர குறியீட்டைப் பயன்படுத்தலாம்.