fbpx

நடிகை சீதாவின் முதல் கணவர் பார்த்திபன்! இரண்டாவது கணவர் யார் தெரியுமா?

சினிமா துறையில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்தவர்கள் பின்பு சில காலத்திற்குப் பிறகு எங்கு இருக்கிறார்கள் என்று தெரியாத அளவிற்கு காணாமல் போய்விடுவார்கள். இது அனைத்து நடிகர், நடிகைகளுக்குமே பொருந்தும். ஆனாலும் ஒரு சில நடிகர், நடிகைகள் இன்றளவும் திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாக இருக்கத்தான் செய்கிறார்கள்.
80களில் தமிழ் சினிமாவை கலக்கி வந்த பலர் இன்று சின்னத்திரையில் மெகா தொடர்களில் நடிக்க தொடங்கி விட்டார்கள்.

அந்த வகையில், 80களில் தென்னிந்திய சினிமாவை கலக்கி வந்த நடிகைகளில் ஒருவர்தான் சீதா. ஆண்பாவம், குரு சிஷ்யன், ராஜநடை என்று பல திரைப்படங்கள் இவருக்கு மிகப்பெரிய ஹிட் ஆகியிருக்கின்றன. ஒரு காலத்தில் பல்வேறு திரைப்படங்களுக்கு கால்ஷீட் கொடுக்க முடியாத அளவிற்கு பிசியாக நடித்து வந்தார் சீதா.அப்படி திரைத்துறையில் பரபரப்பாக வளம் வந்த சீதாவுக்கு குடும்ப வாழ்க்கை நன்றாக அமையவில்லை. ஆண்பாவம் திரைப்படத்திற்கு பின்னர் பார்த்திபனை காதலித்து வந்த அவர், வீட்டை எதிர்த்து கடந்த 1989 ஆம் வருடம் அவரை கரம் பிடித்தார்.

திருமணத்திற்கு பிறகு நடிப்பை நிறுத்திவிட்ட இவருக்கு 2 பெண் குழந்தைகள் பிறந்தார்கள் ஒரு ஆண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்தனர். அதன் பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக, பார்த்திபன் மற்றும் சீதா உள்ளிட்ட இருவரும் விவாகரத்து பெற்று கடந்த 2001 ஆம் ஆண்டு பிரிந்தனர்.

ஆனால் திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்காமல் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த சீதா, கடந்த 2010ம் வருடம் தன்னுடைய 43 வது வயதில் சதீஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவருடனும் பிரச்சனை ஏற்படவே அவரிடம் இருந்தும் பிரிந்து சென்றார் நடிகை சீதா.

Next Post

ரசிகர்களுக்கு எதிர்பாராத ட்விஸ்ட் வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி? இந்த வாரம் வெளியேற்றப்படுபவர் இவர்தானாம்!

Fri Dec 23 , 2022
விஜய் டிவியில் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது சற்றேற குறைய 75% கடந்துவிட்டது. ஆனால் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல்வேறு போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில், இப்போது 10 போட்டியாளர்கள் மட்டுமே அந்த வீட்டில் எஞ்சி இருக்கிறார்கள். முன்பெல்லாம் மக்கள் மத்தியில் பிரபலமான நபர்களை மட்டுமே இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனுமதித்து வந்தார்கள். ஆனால் இந்த சீசனில் எந்தவித பின்புலமும் இல்லாமல் டிக் டேக் செயலியின் மூலமாக பொதுமக்களிடையே […]

You May Like