#Rain: இந்த 8 மாவட்டத்தில் உள்ள மக்கள் உஷாரா இருங்க…! இன்று கனமழை எச்சரிக்கை…!

தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகப்பட்டினத்திலிருந்து சுமார் 470 கிலோமீட்டர் கிழக்கே நிலை கொண்டுள்ளது. இது மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று காலையில் இலங்கை கடற்கரை அருகில் நிலவக் கூடும். அதன் பிறகு மேலும் மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து நாளை காலையில் இலங்கை வழியாக குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.

#Alert..!! இன்று 18 மாவட்டங்களில் கனமழை..!! அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் இடியுடன் மழை..!!

இதனால் இன்று தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

நாளை தென் தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், தேனி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 27, 28 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Vignesh

Next Post

நாளை TNPSC தேர்வு...! அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்...! முழு உள்ளே...!

Sun Dec 25 , 2022
தமிழ்நாடு அரசுப்பணியாளர்‌ தேர்வாணையத்தால்‌ நடத்தப்படும்‌ சிறை அலுவலர்‌ தேர்வு நாளை நடைபெற உள்ளது. தருமபுரி மாவட்டத்தில்‌ தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையத்தால்‌ நடத்தப்படும்‌ சிறை அலுவலர்‌ பதவிக்கான கொள்குறிவகைத்தேர்வு நாளை முற்பகல்‌ மற்றும்‌ பிற்பகல்‌ ஆகிய இருவேளைகளில்‌ பென்னாகரம்‌ வட்டத்தில்‌ உள்ள ஜெயம்‌ பொறியியல்‌ கல்லூரியில்‌ இணையவழி முறையில்‌ நடைபெறவுள்ளது. இதில்‌ மொத்தம்‌ 410 தேர்வர்கள்‌ தேர்வு எழுதவிருக்கின்றனர்‌. தேர்வு மையத்தில்‌ தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும்‌ முழு அளவில்‌ செய்யப்பட்டுள்ளன. […]
TNPSC

You May Like