எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘துணிவு’. இவர்கள் கூட்டணியில் உருவாகி இருக்கும் 3-வது படம் இது. இந்த படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து தயாராவதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், உண்மையான சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் கதை என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இப்படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி கொண்டிருக்கும் நிலையில், தற்போது தமன் இசையில் துணிவு படத்தின் gangstaa பாடல் தோற்போது வெளியாகியுள்ளது.
பொங்கலன்று அஜித் நடிப்பில் “துணிவு” படமும் விஜய் நடிப்பில் “வாரிசு” படமும் வெளியாகவுள்ளது. நேற்றைக்கு வாரிசு படத்தின் இசைவெளியீட்டு விழா நடந்து முடிந்த நிலையில், இன்று துணிவு படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகியுள்ளதால் அஜித் ரசிகர்கள் உற்சசாகத்தில் உள்ளனர்.