fbpx

உங்களிடம் பல பேங்க் அக்கவுண்ட்டுகள் இருக்கிறதா..? அப்படினா இது தெரியாம இருக்காதீங்க..!!

ஒருவர் பல சேவிங்ஸ் அக்கவுண்ட்ஸ்களை வைத்திருப்பது நன்மைகள் மற்றும் தீமைகள் என இரண்டையும் கொண்டுள்ளது. அவை என்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

காலங்கள் மாறி தற்போது அனைத்திலும் டிஜிட்டல் புகுந்து விட்டதால் அலைந்து திரிந்து, பல மணிநேரம் கால் கடுக்க வரிசையில் நின்று பல ஆண்டுகளுக்கு முன்னர் செய்த விஷயங்களை தற்போது மக்கள் சில நொடிகளில் செய்து முடித்து விடுகிறார்கள். வங்கியில் சேமிப்பு கணக்கை (savings account) துவங்குவது பெரிய வேலையாக இருந்த நிலையில், தற்போது தங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் எளிதாக ஓபன் செய்து கொள்கிறார்கள். ஆன்லைனில் சேவிங்ஸ் அக்கவுண்ட்டிற்காக விண்ணப்பிக்கும் ஒரு தனிநபர் வீடியோ KYC-ஐ முடித்து சில நிமிடங்களில் அக்கவுண்ட்டை ஓபன் செய்து விட முடிகிறது. இந்த நடைமுறை காரணமாக மக்கள் பல வங்கிகளில் தங்களுக்கென்று பல சேவிங்ஸ் அக்கவுண்ட்ஸ்களை ஓபன் செய்து கொள்கின்றனர்.

உங்களிடம் பல பேங்க் அக்கவுண்ட்டுகள் இருக்கிறதா..? அப்படினா இது தெரியாம இருக்காதீங்க..!!

இதனால், ஒருவருக்கு ஒரு பேங்கில் அக்கவுண்ட் இருப்பது பெரிய விஷயமாக இருந்த நிலை மாறி, ஒருவரே பல பேங்க்குகளில் அக்கவுண்ட்ஸ் வைத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வங்கிகளும் சேவிங்ஸ் அக்கவுண்ட் ஓபன் செய்ய பல லாபகர திட்டங்களை வழங்குகின்றன. இதுதவிர வங்கிகளால் வழங்கப்படும் சேவைகள் மற்றும் வசதிகள் மாறுபடலாம். இதுபோன்ற சில காரணங்கள் கூட மக்களை ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்திருக்க தூண்டுகின்றன. பல பேங்க் அக்கவுண்ட்ஸ்கள் இருப்பது நல்லது என தோன்றினாலும், சில விஷயங்களை நாம் மனதில் கொள்ள வேண்டும். ஏனென்றால், ஒருவர் பல சேவிங்ஸ் அக்கவுண்ட்ஸ்களை வைத்திருப்பது நன்மைகள் மற்றும் தீமைகள் என இரண்டையும் கொண்டுள்ளது.

உங்களிடம் பல பேங்க் அக்கவுண்ட்டுகள் இருக்கிறதா..? அப்படினா இது தெரியாம இருக்காதீங்க..!!

மினிமம் பேலன்ஸ்… 

நீங்கள் எத்தனை பேங்க் அக்கவுண்ட்ஸ்களை வைத்திருந்தாலும் அவை ஒவ்வொன்றிலும் மினிமம் பேலன்ஸ் தொகை பராமரிக்க வேண்டும். வங்கிகளே இந்த மினிமம் பேலன்ஸ் லிமிட்டை தீர்மானிக்கின்றன. சர்வீஸ் மற்றும் உங்களது அக்கவுண்ட்டை மெயின்டையின் செய்யும் செலவை கருத்தில் கொண்டு, நீங்கள் குறைந்தபட்ச இருப்பு தொகையை பராமரிக்காத போது குறிப்பிட்ட அளவு அபராத கட்டணங்களை வங்கிகள் விதிக்கும்.

பணம் எடுப்பதற்கான லிமிட்…

சில சேவிங்ஸ் அக்கவுண்ட்ஸ்களுடன் இணைக்கப்பட்ட டெபிட் கார்டுகளை நீங்கள் பயன்படுத்தும் போது ஒரு நாளில் இவ்வளவு பணம் தான் எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடு இருக்கும். இந்த சூழலில் நிச்சயமாக உங்களிடம் பல பேங்க் அக்கவுண்ட்ஸ் இருப்பது உதவியாக இருக்கும். நிறைய பணம் தேவைப்படுகிறது என்றால் உங்களிடம் இருக்கும் வெவ்வேறு அக்கவுண்ட்ஸ்களில் இருந்து பெரிய தொகையை எடுக்கலாம். நீங்கள் ஒரே நேரத்தில் பல பேங்க் அக்கவுண்ட்ஸ்களை வைத்திருக்கலாம் என்றாலும், சில அக்கவுண்ட்டை நீங்கள் குறிப்பிட்ட காலத்திற்கு பயன்படுத்தாமல் இருந்தால் அது செயலற்ற அக்கவுண்டாக (Dormant account) குறிப்பிடப்படும். கணக்கை செயலற்ற நிலையில் தொடர்ந்து வைத்திருப்பது பல கட்டணங்களை ஈர்க்கலாம். கடைசியில் இது உங்கள் அக்கவுண்டின் பேலன்ஸ் தேவையின்றி குறைய வழிவகுக்கும்.

வங்கி கட்டணங்கள்…

வங்கிகள் பல சேவைகளை இலவசமாக வழங்கினாலும் ஒரு சில சேவைகளுக்கு கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. பெரும்பாலும், வாடிக்கையாளர்கள் பல கட்டணங்களைப் பற்றி அறிந்திருக்க மாட்டார்கள். எனவே, ஒரு வாடிக்கையாளராக நீங்கள் அக்கவுண்ட் வைத்துள்ள வங்கிகளின் வெவ்வேறு கட்டணங்களை பற்றி நீங்கள் தெளிவாக அறிந்திருக்க வேண்டும். மொத்தத்தில் 2 அல்லது அதிகபட்சம் 3 வங்கி கணக்குகள் வரை பராமரிப்பது விவேகமானது. அப்போது தான் அவற்றை எளிதாக உங்களால் பராமரிக்க மற்றும் கண்காணிக்க முடியும் என்கிறார்கள் நிபுணர்கள்.

Chella

Next Post

தனியார் வங்கியில் வேலை வாய்ப்பு...! மாதம் ரூ.30,000 ஊதியம்..‌! உடனே விண்ணப்பிக்கவும்...!

Tue Dec 27 , 2022
பேங்க் ஆப் பரோடா வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Zonal Relationship Manager பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 60 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவமாக 15 ஆண்டுகள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.30,000 மாத ஊதியம் […]
இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!! தனியார் வங்கிகளில் வேலைவாய்ப்பு..!! என்ன செய்ய வேண்டும்..?

You May Like