எல்லோருக்கும் வயதாகும் அப்படி வயதானால் இளமையில் இருந்த அழகிய தோற்றம் மெல்ல, மெல்ல மறைந்து முதுமை தோற்றம் தென்படும், இது எல்லோருக்கும் நடப்பது தான்.
ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே வயது அதிகமாக இளமை கூடிக் கொண்டே செல்லும். அப்படி ஒரு நபர் தான் நடிகை நதியா. தென்னிந்திய சினிமா உலகத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் சரீனா அனுஷா என்ற நதியா.
80மற்றும் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்த இவர் கடந்த 2004 ஆம் வருடம் முதல் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். நதியாவின் கண்ணியமான தோற்றம், துடிப்பான நடிப்பு நவ நாகரீக உடைகள், ஹேர் ஸ்டைல் என்று எல்லாமே பெண் ரசிகர்களை கூட சம்பாதிக்கும் அளவிற்கு நதியாவை உயர்த்தியது.
கடந்த 1988 ஆம் வருடம் மராட்டியரான கிரீஸ் காட்போல் என்பவரை திருமணம் செய்து 2 பெண் குழந்தைகளை பெற்றெடுத்தார் நதியா. சமீபத்தில் பேட்டி வழங்கிய நதியா அந்த பேட்டியில் இதுவரையில் கமல்ஹாசன் உடன் நடிக்காதது ஏன் என்பது தொடர்பாக தெரிவித்துள்ளார். அதில் அவர் கமல்ஹாசன் உடன் நான் நடிக்காமல் போனது எனக்கு வருத்தமாக தான் இருக்கிறது என கூறியுள்ளார்.
அதற்கு ஒரே ஒரு காரணம்தான் கால்ஷீட் பிரச்சனை வரும் போது வேறொரு படங்களில் நடித்துக் கொண்டிருப்பேன். விக்ரம் திரைப்படத்தில் கூட முதலில் நான் தான் நடிப்பதாக இருந்தது என்று கூறியிருக்கிறார் நதியா.