fbpx

பெற்றோர்களுக்கு பயந்து டெல்லிக்கு ஓடிப்போன 16 வயது சிறுவன்…! காரணம் என்ன தெரியுமா…?

தமிழகத்தில் படிப்பை பொருத்தவரையில் அனைத்து விதத்திலும் பெண் குழந்தைகள் மிக சிறப்பாக விளங்கி வருகிறார்கள்.

ஆனால் ஆண் குழந்தைகளை பொறுத்தவரையில் பெண் குழந்தைகளுக்கு அப்படியே நேர் எதிராக இருக்கிறார்கள். காரணம் ஆண் குழந்தைகளுக்கு படிப்பில் பெரிய அளவில் ஆர்வமில்லை என்பதே உண்மை.

அந்த வகையில், சென்னை வேளச்சேரியில் இருக்கின்ற பள்ளி ஒன்றில் 11ம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவர் ஒருவர் கடந்த 2ம் தேதி பள்ளிக்கு சென்றார். அதன் பிறகு வெகுநேரமான பிறகும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவனின் தந்தை காவல்துறையினரிடம் புகார் வழங்கினார். இது குறித்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜீவால் அவர்களின் நேரடி பார்வையில் வேளச்சேரி ஆய்வாளர் சந்திரமோகன் தலைமையில் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில், அந்த தனி படை காவல்துறையினர் மாணவன் படித்த பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கின்ற கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர் அதில் சிறுவன் மடிப்பாக்கம் ராம்நகர் பேருந்து நிலையத்திற்கு கடந்த 2ம் தேதி மாலை 4 மணி அளவில் சென்று பேருந்தில் ஏறி சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இறங்கினார் என்பது தெரியவந்தது.

ஆகவே இதனை அடிப்படையாகக் கொண்டு உடனடியாக தனி படை காவல்துறையினர் சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த 100க்கும் அதிகமான கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் அந்த சிறுவன் டெல்லிக்கு செல்லும் ஜிடி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறியது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து தனி படை காவல்துறையினர் டெல்லி ஆர்பிஎப் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து சிறுவனின் புகைப்படத்தையும் வாட்ஸ் அப் மூலமாக அனுப்பி அவர்களை உஷார் படுத்தினர். ஆகவே டெல்லி நிஜாமுதீன் ரயில் நிலையத்திற்கு விரைந்து வந்து ரயில் வருவதற்கு முன்னரே அங்கு சென்று காத்திருந்து நேற்று காலை ரயில் நிலையத்தில் இறங்கிய சிறுவனை சென்னைக்கு அழைத்து வந்தனர்.

புகார் கொடுத்த 36 மணி நேரத்திற்குள் காணாமல் போன சிறுவனை கண்டுபிடித்து கொடுத்த சென்னை தனிப்படை காவல்துறையினர் காவல் துறை ஆணையர் மற்றும் சிறுவனின் பெற்றோர் உள்ளிட்டோர் வெகுவாக பாராட்டினர். பெற்றோர் படிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியதால் மாணவன் வீட்டை விட்டு வெளியேறியது காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

Next Post

மது போதையில் விமானத்தில் பெண் பயணியிடம் முகம் சுழிக்கும் விதமாக நடந்து கொண்ட ஆசாமி…!

Thu Jan 5 , 2023
விமானத்தை பொறுத்த வரையிலும் அங்கே எவ்வளவு பெரிய விஐபிகளாக இருந்தாலும் சரி எல்லோருக்கும் ஒரே விதிமுறைதான் பின்பற்றப்படும். சாதாரண பயணியிடம் எப்படி பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறதோ, அதேபோலத்தான் பல விஐபிகளுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படும். விமானத்தில் ஏறிவிட்டால் சாதாரண பயணி அல்லது விஐபி என்று எந்த விதமான பாகுபாடும் காட்டப்படாது. ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த சக பெண் பயணி ஒருவர் மீது ஒரு நபர் சிறுநீர் கழித்த அதிர்ச்சி சம்பவம் […]

You May Like