நடிகர் அஜித்குமார் நடித்த வலிமை திரைப்படம் சென்ற வருடம் வெளியாகி வசூல் வேட்டை நடத்தியது.
150 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை படைத்தது.
இந்த நிலையில், வினோத் இயக்கத்தின் வெளியான வலிமை திரைப்படம் அஜித்தின் இருசக்கர வாகன ரேசிங்கை ரசிக்கும் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்திருந்தது.
தற்சமயம் வினோத், போனி கபூர், அஜித் உள்ளிட்டோரின் கூட்டணியில் துணிவு என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி youtubeல் பல சாதனைகளை படைத்தது. தற்சமயம் எதிர்வரும் பங்கள் பண்டிகை என்பது வரும் 11ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாகும் என்று பட குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
இந்த திரைப்படத்தின் வெளியிட்டு தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்னரே வெளிநாடுகளில் நல்ல ஃப்ரீ புக்கிங் நடைபெற்றது. தற்சமயம் தமிழ்நாட்டில் 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளை உண்டு திரைப்படம் பிடித்திருப்பதாக கூறப்படுகிறது. அந்த விபரம் புக்கிங் உள்ளிட்ட விவரங்களை வைத்து கணித்ததில் இந்த திரைப்படம் முதல் நாள் முடிவில் 30 கோடி ரூபாய் வரையில் வசூலிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.