கலாச்சாரம் மிகவும் பிடித்துப்போனதால் பிலிப்பைன்ஸ் நாட்டு இளம் பெண் ஒருவர் தமிழ்நாட்டு இளைஞரை திருமணம் செய்துள்ள சம்பவம் நாகர் கோவிலில் அரங்கேறியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள தேசமணிநகர் பகுதியை சேர்ந்தவர் ஜெமி ரென்ஸ்விக்கிற்கும் – பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த லாலைனிக்கும், கடல் கடந்தது காதல் ஏற்பட்டது. இறுதியில் அவர்கள் இருவீட்டரின் சம்மதத்துடன் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் புதுமண தம்பதியினரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நாகர்கோவிலில் நடைபெற்றது. சிறுவயதில் இருந்தே இந்திய நாட்டின் மீது ஒரு தனிமரியாதை உண்டு என தெரிவித்துள்ள பிலிப்பைன்ஸ் இளம் பெண், இங்குள்ள கலாச்சாரம், பழக்க வழக்கங்கள் மிகவும் பிடித்துப்போனதாக தெரிவித்துள்ளார்.