fbpx

பிஎஸ்-3, மற்றும் பிஎஸ்-4 வாகனங்களுக்கு தடை..! காற்று மாசால், அரசு அதிரடி அறிவிப்பு…

டெல்லியில் பெருகி வரும் வாகனங்களால், காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையடுத்து பிஎஸ்-3, மற்றும் பிஎஸ்-4  வாகனங்களுக்கு தடை விதித்து  அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுதும், கடந்த 2017  முதல் பி.எஸ் 4 வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பி.எஸ் என்பது, பாரத் ஸ்டேஜ் என்பதின் சுருக்கம் ஆகும். வாகனங்கள் வெளியிடும் புகையால், மாசு ஏற்படுவதை தடுக்க, இந்தியாவில் 2000ம் ஆண்டில் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்நிலையில்  டெல்லியில் காற்று மாசு அளவு 434 -ஐ கடந்துள்ளது. இந்த நிலையில் காற்றுத் தர மேலாண்மை ஆணையம் (CAQM) காற்று மாசு ஏற்படுவதை கட்டுப்படுத்த அறிவுறுத்திய நிலையில், நேற்றைய தினம் முதல், பிஎஸ்.3 பெட்ரோல் வாகனங்களுக்கும், பிஎஸ்.-4  டீசல் வாகனங்களுக்கும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு தற்காலிகமானது தான் எனவும் வரும் வெள்ளிக்கிழமை வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kathir

Next Post

6-ம் வகுப்பு வரை பள்ளி மாணவிகளுக்கு ஹிஜாப் கட்டாயம்...! தலிபான் கல்வி அமைச்சகம் உத்தரவு...!

Wed Jan 11 , 2023
ஆப்கானிஸ்தான் அரசு 6-ம் வகுப்பு வரையிலான பெண்களை தங்கள் படிப்பைத் தொடர அனுமதி வழங்கியதுடன் பள்ளிகளில் ஹிஜாபை கட்டாயம் அணிய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான கல்வி தடை உட்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்ததற்காக உலகளாவிய விமர்சனங்களை சந்தித்தது, ஆளும் தலிபான் இப்போது அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பெண்கள் ஆரம்பக் கல்வியைத் தொடர அனுமதித்துள்ளது. தலிபான் கல்வி அமைச்சகம் தனது அறிவிப்பில்; அரசு ஆறாம் வகுப்பு வரையிலான […]

You May Like