நடிகர் விஜய் நடித்த பொங்கல் ஸ்பெஷலாக வெளியான திரைப்படம் தான் வாரிசு. இந்த திரைப்படத்தை காண்பதற்கு அவருடைய ரசிகர்கள் மிகப்பெரிய ஆவலுடன் காத்திருந்தார்கள்.
இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
திரையரங்குகளில் என்ன தான் இந்த திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தாலும் இந்த திரைப்படத்தின் ஒரு சில காட்சிகளால் பெண்கள் மத்தியில் இந்த திரைப்படத்திற்கு வரவேற்பு குறைவாக இருந்து வருகிறது.
அதாவது, பெண்கள் ஒன்றும் அடிமை கிடையாது என்று நடிகர் விஜயை பெண்கள் தாக்கி பேசியுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்பொரு காலத்தில் பெண் நடிகைகள் என்றாலே வெறும் பாடலுக்கு நடனம் ஆடுவதற்கு மட்டும் தான் என்ற நிலை இருந்தது. ஆனால் இந்த நிலை தற்போது மெல்ல, மெல்ல மாறி வருகிறது.
ஆனால் விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிக்கும் திரைப்படங்களிலேயே பெண்கள் தொடர்பாக சில தவறான காட்சிகள் படமாக்கப்படுகின்றன சமீபத்தில் வெளியான வாரிசு திரைப்படம் தொடர்பாக சில பெண்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
இதற்கு பெண்கள் கோபமாக பெண்கள் ஒன்றும் அடிமை இல்லை. ஆண் என்ன தவறு செய்தாலும் கண்டுகொள்ளாமல் சகித்துக் கொண்டு வாழ வேண்டுமா? இது போன்ற காட்சிகளை முன்னணி நடிகர்கள் படங்களில் வைப்பது தான் வருத்தம் என்று தங்களுடைய கண்டனத்தை பதிவு செய்தனர்.