திருமணம் என்றாலே திருமணம் செய்து கொள்ள போகும் மணமக்களுக்கு நிச்சயமாக மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும்.
ஆனால் அந்த எதிர்பார்ப்பு மணமக்கள் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பாக இருக்க வேண்டுமே தவிர மாமனார் வீட்டில் இருந்து வரும் வரதட்சணையை வைத்து நாம் குடும்பம் நடத்தி விடலாம் என்று நினைத்தால் நிச்சயமாக அந்த மன வாழ்க்கை இனிமையானதாக இருக்காது.
மணமக்கள் இருவரும் ஒருவரை, ஒருவர் புரிந்து கொண்டு வாழ்வில் ஒன்றிணைய வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் திருமணம் செய்து கொண்டால் நிச்சயமாக திருமண வாழ்க்கை இறுதி வரையில் சந்தோஷமாக இருக்கும்.
ஆனால் சொத்துக்காக திருமணம் செய்து கொண்டால் அது மிகப்பெரிய விபரீதத்தை ஏற்படுத்தும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.அந்த வகையில், கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் செல்வராஜ் நகர் பகுதியில் சேர்ந்தவர் விக்னேஷ் இவர் அந்த பகுதியில் பெயின்டிங் வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் தான் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் இவருக்கும் தனியார் கல்லூரியில் படித்து வரும் கேயிச்சியால் (22) என்ற எண்ணுக்கும் திருமணம் நடந்தது திருமணத்தை எடுத்து அவர்கள் இருவரும் பெண் வீட்டின் அருகிலேயே வீடு வாடகைக்கு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் தான் விக்னேஷுக்கு குடிப்பழக்கம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது ஆகவே குடிபோதையில் அவருக்கும், அவருடைய மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.
விக்னேஷ் தன்னுடைய மனைவியிடம் வீட்டு வாடகை கொடுக்க முடியவில்லை. அதனால் உனக்கு சேர வேண்டிய சொத்தை உன் பெற்றோர்களிடம் வாங்கி வா என்று மனைவியிடம் தெரிவித்து தகராறு செய்திருக்கிறார்.இந்த சூழ்நிலையில் தான் நேற்று முன்தினம் குடிபோதையில் வழக்கம் போல தன்னுடைய மனைவியிடம் தகராறு செய்திருக்கிறார்.
அவருடைய மனைவி குடிப்பழக்கத்தை கைவிட வேண்டும் என்று பலமுறை தெரிவித்தும் கணவன் கேட்காததாலும், அடிக்கடி குடித்துவிட்டு வந்து கொடுமைப்படுத்தியதாலும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
இது ஒரு புறம் நடைபெற்றுக் கொண்டிருக்க, உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் தங்கியிருந்த வீட்டை விக்னேஷ் பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.அதிர்ஷ்டவசமாக வீடு எரியும்போது உறவினர்கள் யாரும் அந்த வீட்டில் இல்லாமல் அருகிலிருந்த வீட்டில் தங்கி இருந்ததால் உயிர் சேதம் ஏற்படவில்லை.
இந்த சம்பவத்தை தொடர்ந்து காவல்துறையினர் விக்னேஷ் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்சமயம் அந்த பெண்ணின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக தெரிவித்து, அவருடைய உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் வழங்கியுள்ளனர்.
ஆகவே விருதாச்சலம் காவல்துறையை சார்ந்தவர்கள் இந்த வழக்கை சந்தேகமாரணம் என பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.உண்மையிலேயே அந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவர் கொலை செய்யப்பட்டாரா? என்ற விதத்தில் காவல்துறையினர் விசாரணையை முன்னெடுத்து வருகிறார்கள்.