ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்தவர் நகைச்சுவை நடிகர் வைகை புயல் வடிவேலுஆனால் பின்னாளில் அவர் அரசியலில் இறங்கவே அவருக்கு தமிழக திரைத்துறையில் இருந்த வரவேற்பு மெல்ல, மெல்ல குறைய தொடங்கியது.
சற்றேறக்குறையை 10 வருடங்களுக்கு மேலாக தமிழ் திரை உலகில் பெரிய அளவில் அவர் தலைகாட்டவில்லை.இந்த நிலையில், சமீபத்தில் நாய் சேகர் ரிட்டன் என்ற திரைப்படத்தில் அவர் நடித்து வந்தார்.
இந்த நிலையில், தற்சமயம் நடிகர் வடிவேலுவின் வீட்டில் ஒரு சோகமான நிகழ்வு நடைபெற்று உள்ளது.அதாவது, நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி பாப்பா (87) மதுரை வீரகனூரில் நேற்று இரவு உடல்நல குறைவு காரணமாக, உயிரிழந்தார்.