விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் ரசிகர்களாக இல்லாதவர்களே இல்லை என்றே சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு இந்த நிகழ்ச்சியால் விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங் அதிகரித்து இருக்கிறது.
இந்த நிலையில், இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது பாகத்தின் பினாலே இன்று நடைபெறுகிறது இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார் என்பதை பார்க்க வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த வீட்டிற்குள் தற்சமயம் சிவின் அசிம் மற்றும் விக்ரமன் உள்ளிட்டோர் இறுதிப்போட்டியாளர்களாக இருக்கிறார்கள். ஆனால் இந்த மூவரில் யாரோ ஒருவர் தான் வெற்றியாளராக போகிறார். அது அனைவருக்கும் தெரிந்தது தான் ஆனாலும் சென்ற சில தினங்களாக குறிப்பிட்ட ஒரு போட்டியாளர் தான் இதில் வெற்றியாளர் என்று பலர் தெரிவித்து வருகிறார்கள்.
அவருக்குத்தான் 50 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை என்று ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள். அவர் வேறு யாருமில்லை அசிம் தான் ஆம் போட்டியாளர் அசிம் தான் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த பாகத்தின் வெற்றியாளராக போகிறார் என்று சொல்லப்படுகிறது.
ஆனாலும் இன்னொரு புறம் அசிமிற்கு இருக்கும் அதே அளவிலான வரவேற்பு விக்ரமிற்க்கும் இருக்கிறது. அதேபோல மற்றொரு போட்டியாளரான ஷிவினுக்கும் இருக்கிறது எனவும், இவர்கள் இருவரும் கூட வெற்றி பெற அதிக வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்து வருகிறார்கள். இதில் யார் வெற்றியாளர் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இன்றைய இறுதி போட்டியில் இறுதி கட்டத்தில் என்ன நடக்கப்போகிறது? யார் இந்த கோப்பையை வெல்ல போகிறார் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.