fbpx

அசத்தும் மத்திய அரசு…! இந்தியாவில் மெத்தனால் கலந்த டீசலில் இயங்கும் உள்நாட்டு கப்பல் தொடக்கம்…!

பிப்ரவரி 6 முதல் 8-ஆம் தேதி வரை பெங்களூருவில் இந்திய எரிசக்தி வாரம் 2023 நடைபெற உள்ளதை முன்னிட்டு மெத்தனால் கலந்த டீசலில் இயங்கும் உள்நாட்டு கப்பலின் வெள்ளோட்டத்தை மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி இன்று தொடங்கி வைத்தார்.மெத்தனால் என்பது நிலக்கரி சாம்பல், விவசாயக் கழிவு, அனல் மின் நிலையங்கள் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றிலிருந்து கரியமில வாயு உற்பத்தி செய்யப்படும் குறைந்த கார்பன் ஹைட்ரஜன் கலந்த எரிப்பொருளாகும். சி.ஓ.பி 21 மாநாட்டில் இந்தியாவின் உறுதிப்பாட்டை பூர்த்தி செய்வதற்கான மிகச் சிறந்த வழி.

பெட்ரோல் மற்றும் டீசல் உடன் ஒப்பிடுகையில் சற்று குறைவான எரிசக்தி திறனை மெத்தனால் பெற்றுள்ள போதிலும், போக்குவரத்து துறை (சாலை, ரயில் மற்றும் நீர் வழி), எரிசக்தி துறை (டிராக்டர்கள், வணிக வாகனங்கள் முதலியவை) மற்றும் சமையல் எரிவாயு (எல்.பி.ஜி., மண்ணெண்ணெய் மற்றும் மரத்தின் கரி) ஆகியவற்றின் மாற்று எரிபொருளாக மெத்தனாலை பயன்படுத்தலாம்.

Vignesh

Next Post

5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர்…..! பரபரப்பு தீர்ப்பு வழங்கிய அரியலூர் மகளிர் விரைவு நீதிமன்றம்….!

Wed Jan 25 , 2023
தமிழ்நாடு முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியான குற்றங்கள் நாள்தோறும் நடந்த வண்ணம் இருக்கின்றனர்.இது போன்ற சம்பவங்களை கேள்விப்படும் போதெல்லாம் சாதாரண பாமர மக்கள் கொதித்தெழ செய்கிறார்கள். ஆனால் அவர்களால் கோபப்பட மட்டும்தான் முடியுமே தவிர இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை அவர்களால் எதுவும் செய்ய முடியாது.ஆனால் அதிகாரத்தில் இருப்பவர்கள் நினைத்தால் இது போன்ற நபர்களை நிச்சயமாக தண்டிக்கலாம். இருந்தாலும், அதிகாரத்தில் இருப்பவர்கள் அவர்களுடைய சுயலாபத்தை மட்டுமே […]

You May Like