“பதான்” படத்தை திரையிட விடாமல் அடாவடித்தனம் செய்த 9 பேர் அதிரடி கைது…!

நேற்று ஷாருக் கான் நடித்த ‘பதான்’ திரைப்படத்தைத் திரையிடுவதற்கு இடையூறு விளைவித்ததற்காக, ஒன்பது பஜ்ரங் தள உறுப்பினர்களை போலீசார் கைது செய்தனர். போராட்டக்காரர்கள் திரையரங்கு கண்ணாடிகளை அடித்து நொறுக்கியதுடன், திரைப்பட போஸ்டர்களை கிழித்தெறிந்தனர். இதை எடுத்து சம்பவ இடத்திற்கு வையுங்கள் போலீசார் உடனடியாக கைது செய்தனர்.


காவல்துறையின் கூற்றுப்படி, பஜ்ரங் தள் உறுப்பினர்கள் ஃபரிதாபாத் செக்டார் 35 இல் ஒன்றுகூடி, படம் திரையிடப்பட்ட கிரவுன் இன்டீரியர்ஸ் மால் நோக்கி அணிவகுத்துச் சென்ற பின்னர் இந்த சம்பவம் நடந்ததாக கூறியுள்ளனர்.பின்னர் திரையரங்குக்குள் நுழைந்த அவர்கள் படத்தைப் புறக்கணிப்பதாக கோஷங்கள் எழுப்பினர்.

இதனால் படம் பார்க்க வந்த பலர் திரையரங்கை விட்டு வெளியேறின ர் சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் கிடைத்தவுடன் விரைந்து சென்று அவர்களை கைது செய்வதாக தெரிவித்துள்ளனர்.

Vignesh

Next Post

பழம்பெரும் பாடகிக்கு பத்மபூஷண் விருது..!! மத்திய அரசு அறிவிப்பு..!!

Thu Jan 26 , 2023
2023ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசால் வழங்கப்படும் பத்ம விருதுகள், உயரிய விருதாக கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், இந்தாண்டு பத்ம விருதுகள் பெறும் நபர்களின் பெயர் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 6 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகளும், 9 பேருக்கு பத்ம பூஷன் விருதுகளும், 91 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. […]
பழம்பெறும் பாடகிக்கு பத்மபூஷண் விருது..!! மத்திய அரசு அறிவிப்பு..!!

You May Like