fbpx

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்..!! அதிமுக வேட்பாளர் இவரா..? எடப்பாடி பழனிசாமி எடுத்த அதிரடி முடிவு..!!

ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசு அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி, திமுக கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் மற்றும் முன்னாள் எம்எல்ஏ தென்னரசு போட்டியிட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகின. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான தேர்தல் பணிக்குழுவில் முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் பெயர் இடம்பெற்றுள்ளது. அதேவேளையில் முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசுவின் பெயர் தேர்தல் பணிக் குழுவில் இடம் பெறவில்லை. இதை வைத்துப் பார்க்கும்போது கே.எஸ்.தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தலில் போட்டியிட கே.எஸ்.தென்னரசு விருப்பமனுவை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. விருப்ப மனு பெறுவதற்கான அவகாசம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக பணிக்குழு பொறுப்பாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடத்துகிறார். நாளை நண்பகலுக்குள் அதிமுக பொறுப்பாளர்கள் அனைவரும் ஈரோட்டில் இருக்க எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Chella

Next Post

செம ஷாக்..!! 3,000 ஊழியர்களை வேலையை விட்டு தூக்கும் பிரபல ஐடி நிறுவனம்..!!

Thu Jan 26 , 2023
ஜெர்மனை சேர்ந்த பிரபல ஐடி நிறுவனமான எஸ்ஏபி (சேப்) நிறுவனம் 3,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர். இதனால், உலகளவில் முன்னணி நிறுவனங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, அமேசான், ட்விட்டர், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் பணிநீக்க அறிவிப்புகளை சமீபத்தில் அறிவித்தது. இந்நிலையில், சர்வதேச […]

You May Like