வரும் தீபாவளி பண்டிகைக்கு புதுச்சேரியில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 10 கிலோ அரிசி மற்றும் இரண்டு கிலோ சர்க்கரைக்கு பதிலாக அரசு ரொக்கமாக வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய ரங்கசாமி, 10 கிலோ அரிசி மற்றும் 2 கிலோ சர்க்கரைக்கு சமமான தொகை அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்படும் என்றார். தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் பட்டியலின மக்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், குடும்ப அட்டையில் பெயர் உள்ள 18 வயதை பூர்த்தி செய்த நபருக்கு இலவச வேட்டி சேலைக்கு பதிலாக ரூ. 500 வழங்கப்படும்.
மாநிலத்தில் மொத்தம் 57, 868 ஆண்களும், 67,864 பேருக்கு இந்த தொகை வழங்கப்படும் என போக்குவரத்து மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா தெரிவித்துள்ளார்.