சீனாவில் ஒரு மணப்பெண் தனது முன்னாள் காதலர்களை திருமணத்திற்கு அழைத்தது மட்டுமின்றி, அவர்களை ஒரே வட்ட மேசையில் அமர ஏற்பாடு செய்துள்ளார்.
சமூக வலைதளங்கள் பல்வேறு வீடியோக்கள் மற்றும் போட்டோக்கள், மீம்கள் அவ்வப்போது வைரலாகி வருகின்றன.. குறிப்பாக திருமணங்களில் நடக்கும் சுவாரஸ்ய சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் லைக்குகளை அள்ளி வருகின்றன.. அந்த வகையில் சீனாவின் ஹூபே மாகாணத்தில் நடந்த திருமணத்தில் நடந்த சம்பவம் கவனம் ஈர்த்துள்ளது.. அந்த திருமணத்தில், மணப்பெண் தனது முன்னாள் காதலர்கள் அனைவரையும் திருமணத்திற்கு அழைத்தது மட்டுமின்றி, அவர்களை ஒரே வட்ட மேசையில் அமர ஏற்பாடு செய்துள்ளார்.
அந்த திருமணத்தின் வரவேற்பு விழாவின் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. இந்த திருமணம் ஜனவரி 8-ம் தேதி நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து இந்த திருமணம் சமூக வலைதளத்தில் பேசு பொருளாக மாறியது.. ”Table of Ex-Boyfriends” (முன்னாள் காதலர்களுக்கான டேபிள்) என்று குறிப்பிடப்பட்டிருந்த இடத்தில் காதலர்கள் அமர்ந்திருந்தனர். மேலும் அவர்கள் அனைவரையும் பழிவாங்குவதற்காகவே திருமணத்திற்கு அழைத்ததாக கூறப்படுகிறது..
ஆனால் அங்கு முன்னாள் காதலர்கள் அனைவரும் கூச்சத்துடன் இருந்ததாகவும், அவர்கள் வரவேற்பு விழாவை சிறிது கூட ரசித்ததாகத் தெரியவில்லை என்று பிரபல ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டது… எனினும் அனைத்து முன்னாள் காதலர்களும் நல்ல நடத்தை மற்றும் மரியாதைகுரியவர்கள் என்பதை அந்த வீடியோக்கள் காட்டுவதாக சீன சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்..
எப்படி ஒரே குணமுடைய பல ஆண்களை எப்படி முடிந்தது?” என்று ஒரு பயனர் கேள்வி எழுப்பி உள்ளார்.. மற்றொரு பயனர், “மணமகள் அவர்களை அழைத்தது மட்டும் தைரியம் இல்லை.. அத்தனை ஆண்கள் கலந்து கொண்டதும் தைரியமான முடிவு தான்..” என்று குறிப்பிட்டுள்ளார்..