நாடு முழுவதும் உள்ள ஐஐடி, என்ஐடி, ஐஐஎம் மற்றும் ஐஐஐடி உள்ளிட்ட மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் மேற்படிப்பு படிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மாணவ, மாணவிகளுக்கு ரூ.2 லட்சம் வரை உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. உதவித்தொகையை மாணவர்கள் பெறுவதற்கு குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.2,50,000 கீழ் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் உதவித்தொகை பெற விருப்பமுள்ள மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், https://bcmbcmw.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்களை பதிவிறக்கி பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான கால அவகாசம் (ஜனவரி 31) இன்றுடன் முடிவடைகிறது.