இந்த 13 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை…

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்ட கீழடுக்கு சுழற்சி நிலவுகின்றது. இதன் காரணமாக தமிழகத்திற்கு கனமழை மிகக் கனமழை பெய்யும் எனவும் இடி மின்னலுடன் மழை பெய்யும் எனவும் அறிக்கை வெளியிட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக கடலோரத்தில் அதிக கனமழையும் உள் மாவட்டங்களில் மிகக்கனமழை பெய்யும் எனவும் வேலூர், திருவண்ணாமலை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருப்பத்தூர், புதுக்கோட்டை, புதுவை, காரைக்கால், திருவாரூர், கடலூர் போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளத.

நாளை, சென்னை, செங்கல்பட்டு உள்பட 15 மாவட்டங்களில் கனமழை தொடரும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவழை தொடங்கியுள்ளதால் ஒரு வாரமாகவே ஆங்காங்கே மழை பெய்து வருகின்றது. இன்று காலை முதலே சென்னையில் மிதமான மழை பெய்து வருகின்றது.

தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் மிதமான மழை ஆங்காங்கே பெய்து வருகின்றது. நாளை சேலம், தருமபுரி உள்ளிட்ட 8 மாவட்டங்களிலும் மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதுஎன்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Next Post

ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த அனுமதி… நவம்பர் 6-ல் பேரணி…

Mon Oct 31 , 2022
அக்டோபர் 2-ம் தேதி பேரணி நடத்த ஆர்.எஸ்.எஸ். அனுமதி கேட்டு வந்த நிலையில் தற்போது பேரணி நடத்துவதற்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது. காந்தி ஜெயந்தி நாளில் தமிழகத்தில் பேரணி செல்வதற்கு ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டு அனுமதி கேட்டிருந்த நிலையில் பேரணி நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதிக்கவில்லை. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இதை விசாரித்த நீதிபதிகள் காவல்துறை அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் நீதிமன்ற உத்தரவையும் மீறி அனுமதி […]

You May Like