சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த பெண்ணை போலீசார் கைது செய்து இருக்கின்றனர். அவரிடமிருந்து 140 மது பாட்டில்களை பறிமுதல் செய்திருக்கிறது காவல்துறை.
சென்னையில் மது பாட்டில்களை சட்ட விரோதமாக விற்பனை செய்வதை தடுப்பதற்கு காவல்துறையினர் பல்வேறு வகையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தீவிர சோதனைகளையும் அவ்வப்போது நடத்தி வருகிறது தமிழக காவல்துறை. இந்நிலையில் ஒரு வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை நடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்திருக்கிறது.
இதனையடுத்து காவல்துறையினர் சென்னை மயிலாப்பூரில் குறிப்பிட்ட அந்த வீட்டில் சோதனை நடத்தினர். அந்தச் சோதனையில் வீட்டிலிருந்து 140 மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. மயிலாப்பூரில் பிடாரி அம்மன் தெருவை சார்ந்த பெண் ஒருவர் இவ்வாறு வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து வீட்டில் இருந்த மது பாட்டில்களை கைப்பற்றிய போலீசார் வனிதா என்ற 35 வயது பெண்ணையும் கைது செய்தனர். இவர் வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
வீட்டில் சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த அந்த பெண் கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. மேலும் இதில் தொடர்புடைய அவரது கணவரையும் காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது. பெண் ஒருவரின் வீட்டிலிருந்து 140 மது பாட்டில்கள் எடுக்கப்பட்ட சம்பவம் மயிலாப்பூர் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. சட்டவிரோதமான மது விற்பனைக்கு எதிராக காவல்துறையும் எவ்வளவோ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் இது போல் கள்ளச் சந்தையில் மது விற்பனை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.