fbpx

அதிமுகவின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை…..! சிபிஎம் விலாசல்…..!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற 27ஆம் தேதி நடைபெறவிருக்கிறது .இதற்கான பிரச்சாரம் வரும் 24ஆம் தேதி ஆரம்பமாகிறது இந்த தேர்தலுக்காக ஆளும் தரப்பான திமுக, எதிர்க்கட்சியான அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பரபரப்பாக செயல்பட்டு வருகின்றன.

ஆதம்தரப்பாக இருக்கக்கூடிய திமுக எப்படியாவது இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று முழுமூச்சுடன் செயல்பட்டு வருகிறது அதே போல எதிர்க்கட்சியான அதிமுக எப்படியாவது இந்த தேர்தலில் வெற்றி பெற்று கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்று நிரூபிக்க களமிறங்கி இருக்கிறது.

இந்த நிலையில், சேலத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் மத்திய நிதிநிலை அறிக்கையில் 100 நாள் வேலை திட்டத்திற்காக கடந்த பட்ஜெட்டில் 79 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போதைய பட்ஜெட்டின் 60000 கோடி ரூபாய் தான் ஒதுக்கப்பட்டு இருக்கிறது என்று குற்றம் சுமத்தியிருக்கிறார்.

ஆகவே இதனை கண்டித்து வருகின்ற 27 மற்றும் 28 உள்ளிட்ட தினங்களில் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக அவர் கூறியிருக்கிறார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் விவகாரத்தில், சர்ச்சை எழாமல் எல்லா தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் பேனா சிலை அமைக்க முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் இ வி கே எஸ் இளங்கோவன் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று நம்பிக்கை கூறிய அவர் அதிமுகவின் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை இல்லை என்று தெரிவித்திருக்கிறார். பன்னீர்செல்வம் வேட்பாளரை திரும்பப் பெற்றதால் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு கிடைத்ததாக தெரிவித்திருக்கிறார்.

மேலும் அதிமுகவின் வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தில் நின்று விட்டால் வெற்றி பெற்று விடலாம் என்பது உண்மை அல்ல. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட தான் பர்கூர் தொகுதியில் ஜெயலலிதாவை தோல்வியை சந்தித்தார் என்று கூறியுள்ளார். பாஜகவை தோளில் சுமந்து திரிவதால் அதிமுகவை பொதுமக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் அவர் கூறியிருக்கின்றார்.

Next Post

1,300 பேரை பணியில் இருந்து நீக்கிய Zoom நிறுவனம்.. CEO வெளியிட்ட அதிர்ச்சி அறிவிப்பு...

Wed Feb 8 , 2023
உலகின் பல்வேறு முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் கடந்த ஆண்டு முதல் பணிநீக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.. அதிக பணியமர்த்தல், நிச்சயமற்ற உலகளாவிய பொருளாதார நிலைமைகளில் ஏற்பட்ட வலுவான பின்னடைவு ஆகியவை காரணமாக வேலைகளை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.. அந்த வகையில் பெருமளவிலான பணிநீக்கங்கள் 2023 ஆம் ஆண்டிலும் தொடர்ந்து வருகிறது.. அந்த வகையில், Zoom நிறுவனம், 1,300 பேரை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.. கொரோனா தொற்றுநோய்க்கு […]

You May Like