கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான ஆட்சேர்ப்பு அறிவிப்பை பணியாளர் தேர்வு ஆணையம் ( Staff Selection Commission – SSC) வெளியிட்டுள்ளது. SSC கான்ஸ்டபிள் (GD- General Duty) தேர்வு 2022க்கான தற்காலிக காலியிடங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ssc.nic.in என்ற ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பட்டியலைச் சரிபார்க்கலாம். இந்த ஆட்சேர்பு நடவடிக்கை மூலம் மொத்தம் 46,435 காலி பணியிடங்கள் நிரப்பப்படும்.

எல்லைப் பாதுகாப்புப் படை (Border Security Force -BSF), மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) (entral Industrial Security Force -CISF), மத்திய ரிசர்வ் போலீஸ் படை (Central Reserve Police Force – CRPF), இந்தோ-திபெத் எல்லையில் கான்ஸ்டபிள் (Indo-Tibetan Border Police -ITBP) சஷாஸ்த்ரா சீமா பால் (Sashastra Seema Bal -SSB), செயலக பாதுகாப்புப் படை (Secretariat Security Force -SSF), அஸ்ஸாம் ரைபிள்ஸில் ரைபிள்மேன் (Rifleman in Assam Rifles) ஆகிய பதவிகளுக்கான ஆட்சேர்ப்புக்கான போட்டித் தேர்வை பணியாளர் தேர்வு ஆணையம் நடத்த உள்ளது. உள்துறை அமைச்சகம் மற்றும் பணியாளர்கள் தேர்வு ஆணையம் இடையே கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி தேர்வு நடைபெற உள்ளது..
தேர்வு முறை : கணினி அடிப்படையிலான தேர்வு (CBE), உடல் திறன் தேர்வு (PET), உடல் ரீதியான தரநிலைத் தேர்வு (PST) ஆகியவற்றில் செயல்திறன் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அதன்பின்னர் மருத்துவ பரிசோதனை, மற்றும் ஆவண சரிபார்ப்பு பணிகள் நடைபெறும்..
SSC கான்ஸ்டபிள் GD தற்காலிக காலியிடங்கள் பட்டியலை பதிவிறக்கம் செய்வது எப்படி?
- பணியாளர் தேர்வு ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான ssc.nic.in ஐப் பார்வையிடவும்.
- இணைப்பைத் தேடுங்கள்.
- ஒரு புதிய PDF ஆவணம் திரையில் தோன்றும்.
- பி.டி.எஃப்-ஐ பதிவிறக்கம் செய்து, எதிர்கால குறிப்புக்காக பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளலாம்.