பிக்பாஸ் பிரபலம் கட்டும் புதிய வீடு..!! தாமரை வெளியிட்ட வீடியோ..!! குவியும் வாழ்த்து..!!

தமிழ் சின்னத்திரையில் பிரம்மாண்ட மற்றும் மெகா ஹிட் ஷோவாக இருந்து வருகிறது பிக்பாஸ். கடந்த 2017ஆம் ஆண்டு இதன் முதல் சீசன் ஒளிபரப்பாகிய நிலையில், சமீபத்தில் 6-வது சீசன் முடிவுக்கு வந்தது. இந்த 6 சீசன்களையுமே உலகநாயகன் கமல்ஹாசன் மிக சுவாரசியமாக தொகுத்து வழங்கியதும் இந்த ரியாலிட்டி ஷோ, மெகாஹிட் ஆக முக்கிய காரணம். பிக்பாஸ் ஷோவில் மக்களுக்கு நன்கு பரிச்சயமான நபர்களுடன், இதுவரை தெரியாத சில நபர்களும் பங்கேற்பது வழக்கம். அப்படி பெரும்பாலான மக்களுக்கு முன்பின் தெரியாத பல நபர்கள், பிக்பாஸில் பங்கேற்று தற்போது கோடிக்கணக்கான மக்களுக்கு தெரிந்தவர்களாகவும், பிரபலமாகவும் உள்ளனர்.


அப்படிப்பட்ட ஒருவர் தான் பிக்பாஸின் சீசன் 5-ல் பங்கேற்று மக்களை பெரிதும் கவர்ந்த தாமரை செல்வி. பெரிய பின்புலம் இல்லாத சாதாரண மேடை நாடக கலைஞர் தான் இந்த தாமரைச்செல்வி. பொருளாதாரம் குறைந்த வர்க்கத்தை சேர்ந்த தாமரை லட்சக்கணக்கில் பணத்தை எடுத்துக் கொண்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற வாய்ப்பு கிடைத்தும், பாதியில் போக மாட்டேன், இறுதி வரை விளையாடுவேன் என்று காட்டிய உறுதி அவர் மீதான மரியாதையை அதிகமாக்கியது. பிக்பாஸை முடித்த கையோடு சில படங்கள், பாரதி கண்ணம்மா சீரியல் என கமிட்டாகி நடித்தார். அடுத்தடுத்தும் அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது.

சின்னத்திரை பிரபலங்கள் பலரும் சொந்தமாக ஒரு யூடியூப் பக்கம் திறந்து அதில் நிறைய விஷயங்களை வீடியோவாக எடுத்து பதிவிட்டு வருகின்றனர். அப்படி அண்மையில் தாமரை தனது யூடியூப் பக்கத்தில் தான் புதியதாக கட்டிவரும் வீட்டை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவரது மொத்த குடும்பமும் உள்ளனர்.

Subscribe to my YouTube Channel

CHELLA

Next Post

எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு…..! நீதிமன்றம் வைத்த ட்விஸ்ட்…..!

Tue Feb 14 , 2023
பாலியல் வன்கொடுமை என்பது தமிழகத்தில் சர்வ சாதாரணமாக, நடைபெறுகிறது. பல நாடுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டால் அவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் அப்படி மிகக் கடுமையான தண்டனை. அதன் காரணமாக தானோ என்னவோ தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் திமுக ஆட்சி காலத்திலும் சரி, இதற்கு முன்பு நடந்த அதிமுக ஆட்சி […]
202007271516596726 Chennai High Court has directed the Central Government to SECVPF

You May Like