fbpx

ஐபிஎல் 2023 அட்டவணை வெளியீடு!… முதல் லீக் ஆட்டத்தில் சென்னை – குஜராத் அணிகள் மோதல்!

நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, முதல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – குஜராஜ் டைட்டன் அணிகள் மோதவுள்ளன.

கடந்த ஆண்டு ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றிபெற்று ஐபிஎல் கோப்பையை தட்டிச்சென்றது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிக்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. மார்ச் 31ம் தேதி தொடங்கி மே 28ம் தேதிவரை போட்டிகள் நடைபெறுகிறது. மொத்தம் 12 மைதானங்களில் நடைபெறுவுள்ள நடப்பு சீசனின் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது. இப்போட்டி அகமதாபாத்தில் நடக்கிறது. இரண்டாவது நாளில் இரண்டு ஆட்டங்கள் நடக்கின்றன. ஒரு ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. மற்றொரு ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மொத்தம் 70 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. லீக் ஆட்டங்கள் மே 21ம் தேதி நிறைவடைகின்றன. இறுதிப்போட்டி மே 28ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. இதில் குரூப் ஏ பிரிவில் மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளும், குரூப் பி பிரிவில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ் அணிகளும் இடம்பெற்றுள்ளன.

ஏப்ரல் 3 அன்று நடைபெறவுள்ள லீக் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் லக்னோ அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் களமிறங்குகின்றன. இதன்மூலம் 3 ஆண்டுகளுக்கு பிறகு சிஎஸ்கே அணி, சென்னையில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னையில் கடைசியாக ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறுவேன் என்று தல தோனி தனது விருப்பத்தையும் வெளிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Kokila

Next Post

“ மனைவியின் இழிவான, அவமானகரமான வார்த்தைகள் கொடுமைக்கு சமம்..” விவாகரத்தை உறுதி செய்த உயர்நீதிமன்றம்..

Sat Feb 18 , 2023
மனைவியின் இழிவான, அவமானகரமான வார்த்தைகள் கொடுமைக்கு சமம் என்று டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது குடும்ப நீதிமன்றத்தின் விவாகரத்து உத்தரவை எதிர்த்து பெண் ஒருவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில்மனு தாக்கல் செய்திருந்தார்.. இந்த மனு நீதிபதிகள் சஞ்சீவ் சச்தேவா மற்றும் விகாஸ் மகாஜன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.. அப்போது அந்த மேல்முறையீட்டை தள்ளுபடி செய்த நீதிபதிகள், குடும்ப நீதிமன்றம் வழங்கிய விவாகரத்து உத்தரவை உறுதி செய்தனர்.. மேலும் […]

You May Like