தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகர் மயில்சாமி விஜய், அஜித், விக்ரம் உள்ளிட்ட பல முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
இவர் ஒரு காலத்தில் சன் டிவியில் தொகுத்து வழங்கிய காமெடி டைம் நிகழ்ச்சி இவராலேயே பிரபலமானது. அதோடு, பல திரைப்படங்களில் இவருடைய நகைச்சுவை மிகவும் பிரபலமாக இருந்து வந்தது.
அதிலும் விஜயுடன் இணைந்து நடித்த கில்லி, அஜித்துடன் இணைந்து நடித்த வீரம், விக்ரமுடன் தூள், எல்கேஜி சென்ற வருடம் வெளியான நெஞ்சுக்கு நீதி என்று பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
இந்த நிலையில், அவருக்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது ஆகவே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அவர் திடீரென்று மரணம் அடைந்திருக்கிறார்.அவருடைய மறைவு தமிழ் திரை உலகில் இருப்பவர்களுக்கு மட்டுமல்லாமல் அவருடைய ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.