fbpx

ஆண்களே உஷார்! ஆண்களை குறி வைத்து தட்டி தூக்கிச் சென்று பலாத்காரம் செய்யும் ஆறரை அடி முரட்டு மனிதர்! வீடியோ சிக்கியது!

கன்னியாகுமரியில் வட மாநில இளைஞர்களை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்யும் மர்ம நபரை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது. தமிழகத்தின் தென்கோடியான கன்னியாகுமரி ஒரு சிறந்த சுற்றுலா தளமாகவும் கோவில்களின் நகரமாகவும் திகழ்ந்து வருகிறது. இங்கு ஏராளமான வடநாட்டு சுற்றுலா பயணிகள் வருவதோடு வட மாநிலங்களைச் சார்ந்தவர்களும் பணிபுரிந்து வருகின்றனர். கன்னியாகுமரியில் நான்கு வழிச்சாலை அருகே டாஸ்மாக் ஒன்று உள்ளது. இப்பகுதிக்கு இரவு நேரங்களில் தனியாக வரும் வடமாநில இளைஞர்களை ஒரு நபர் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று டாஸ்மாக் அருகே நின்று கொண்டிருந்த வடமாநில இளைஞர் ஒருவரை சுமார் 6.5 அடி உயரமுள்ள முரட்டு மனிதர் ஒருவர் வலுக்கட்டாயமாக தன்னுடைய பைக்கில் தூக்கி வைப்பதைப் போன்ற ஒரு வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வந்தது. அப்போது அந்த இளைஞர் இவரிடமிருந்து தப்பிச் செல்வதற்காக அலறினார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் திரண்டு விடவே ஆறரை அடி மர்ம ஆசாமி அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். இந்த சம்பவங்களை அருகில் இருந்து படம் பிடித்துக் கொண்டிருந்த ஒருவர் இதனை சமூக வலைதளங்களில் பரப்பி இருக்கிறார். இந்த வீடியோவின் மூலம் நீண்ட நாட்களாக கன்னியாகுமரி பகுதியில் ஆண்களை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து வந்த மர்ம நபரின் அடையாளம் தெரிந்திருக்கிறது. மேலும் காவல்துறையின் விசாரணையில் மனைவியை பிரிந்து வாழும் இந்த நபர் வடமாநில இளைஞர்களை கடத்திச் சென்று அவர்களை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு பின்னர் திருப்பி அனுப்புவதாக தெரிந்திருக்கிறது. இச்சம்பவத்தை தொடர்ந்து அந்த நபரை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது.

Rupa

Next Post

திருவள்ளூர் அருகே கழுத்தில் நகக்கீரல்களுடன் மர்மமான முறையில் இளைஞர் மரணம் - மனைவியிடம் காவல்துறை தீவிர விசாரணை!

Tue Feb 21 , 2023
திருவள்ளூர் மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. திருவள்ளூர் மாவட்டம் சுந்தர்ராஜபுரம் பகுதியைச் சார்ந்தவர் 29 வயது இளைஞரான யுவராஜ் இவருக்கு திருமணம் ஆகி காயத்ரி என்ற மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளது . இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இவர் தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார் . இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ […]

You May Like