fbpx

”இனி 6 வயது ஆனால்தான் ஒன்றாம் வகுப்பு”..!! மத்திய அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு..!!

மாணவர்களை ஒன்றாம் வகுப்புக்கு பள்ளியில் சேர்க்கும் வயதை 6 ஆக உயர்த்த வேண்டும் என மத்திய அரசு மாநில அரசுகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இதுதொடர்பான கடிதத்தில், ”தேசிய கல்விக் கொள்கை 2020, குழந்தைகளின் அடிப்படைக் கட்டத்தில், அவர்களின் கற்றலை வலுப்படுத்த பரிந்துரைப்பதாக கூறப்பட்டுள்ளது. அதன்படி, 3 முதல் 8 வயது வரையுள்ள அனைத்து குழந்தைகளுக்கும், 3 ஆண்டுகள் பிரீ-ஸ்கூல் கல்வியும், 2 ஆண்டுகள் ஒன்றாம் மற்றும் இரண்டாம் வகுப்பு கல்வியும் அளிக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அங்கன்வாடிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும், தனியார் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கும் தரமான அடிப்படைக் கல்வியை 3 ஆண்டுகளுக்கு கொடுக்கும்போதுதான், அவர்களுக்கான அடிப்படை கற்றல் மேம்படும்.

மேலும், குழந்தைகளின் வயது மற்றும் வளர்ச்சிக்கு ஏற்ற பாடத்திட்டமும், கற்பித்தலில் பயிற்சி பெற்ற தகுதி வாய்ந்த ஆசிரியர்களின் இருப்பும், இந்த அடிப்படைக் கற்றலை மேம்படுத்துவதற்கான முக்கிய காரணிகளாக அமைகின்றன. எனவே, அனைத்து பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை வயதை 6 ஆக உயர்த்த வேண்டும். அதற்கான வழிமுறைகளை வகுக்க வேண்டும். அதேபோல் பாலர் கல்வியில் (DPSE) 2 வருட டிப்ளமோ படிப்பிற்கான செயல்முறையைத் தொடங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பாடத்திட்டமானது, மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலால் வடிவமைக்கப்பட்டு, அதன் மேற்பார்வை மற்றும் கட்டுப்பாட்டின் கீழ், மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் நடத்தப்படும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

”இந்தியாவில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படும்”..!! எங்கு..? எப்போது..? பீதியை கிளப்பியும் விஞ்ஞானிகள்..!!

Wed Feb 22 , 2023
துருக்கி, சிரியா நாடுகளில் அண்மையில் ஏற்பட்ட பெரும் நிலநடுக்கம் உலகையே பெரும் துயரத்தில் ஆழ்த்தியது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை பல்லாயிரத்தைத் தாண்டியது. இன்னும் கூட அவ்வப்போது அந்த நாடுகளில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. துருக்கி, சிரியாவை தொடர்ந்து உலகின் பல்வேறு நாடுகளிலும் கூட அடிக்கடி நில அதிர்வுகள் ஏற்பட்டு வருகின்றன. இந்தியாவில் கடந்த 2005இல் காஷ்மீரில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சுமார் 80,000 பேர் உயிரிழந்தனர். […]

You May Like