fbpx

வெயில் தாக்கம்…! அடுத்த 4 நாட்களுக்கு எல்லாம் எச்சரிக்கையா இருங்க…! வானிலை ஆய்வு மையம்…!

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். நாளை முதல் 26-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 முதல் 23 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கக்கூடும். இன்னும் ஓரிரு நாட்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து பனியின் தாக்கம் குறையும். பகல் நேரங்களில் முன்பை விட வெப்பத்தின் தாக்கம் அதிகளவில் காணப்படும். இரவு நேரங்களில் காற்றின் வேகம் குறைவாக காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது‌.

Vignesh

Next Post

பள்ளி நேரங்களில் மாற்றம்...! இனி காலை 7 மணி வகுப்புகள் தொடங்கும்...! அரசு அறிவிப்பு..!

Thu Feb 23 , 2023
பள்ளிகளுக்கான பள்ளி நேரத்தை ஹரியானா மாநில அரசு திருத்தம் செய்துள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பிற பள்ளிகளுக்கான பள்ளி நேரத்தை ஹரியானா மாநில அரசு திருத்தம் செய்துள்ளது. இந்த உத்தரவுகள் மாநிலம் முழுவதும் இன்று முதல் அமல்படுத்தப்படும். ஹரியானா பள்ளிக் கல்வி இயக்குநரகம் (DoE) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஒரே ஷிப்ட் பள்ளிகள் இனி காலை 8:00 மணி முதல் […]

You May Like