ராஜா ராணி சீசன் 2 தொடரில் கதாநாயகிகளுக்கு முறையான கம்யூனிகேஷன் இல்லாத நிலையில் தான் இந்த சீரியலை விட்டு விலகி விட்டதாக தகவல் கிடைத்திருக்கிறது.
இந்த சீரியலில் முதல் பாகத்தில் ஆலியா மானசாவும், சஞ்சீவும் நடித்திருந்தார்கள் ராஜா ராணி முதல் பாகத்தில் ஜோடியாக நடித்து தற்சமயம் நிஜ வாழ்விலும் ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.
ராஜா ராணி தொடரின் முதல் பாகம் குடும்ப வாழ்க்கை என்றால் எப்படி இருக்கும் என்பதை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட ஒரு தொடர் ஆனால் ராஜா ராணி 2ம் பாகத்தில் குடும்ப வாழ்க்கையுடன் இணைந்து ஐபிஎஸ் அதிகாரியாகவும், அதே நேரத்தில் குடும்பத்தை கவனிக்கும் ஒரு பெண்ணாகவும் கதாநாயகி காட்டும் ஒரு கதைக்களமாக நகர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த தொடரில் சித்துவுக்கு துணையாக ஆலியா மானஸா நடித்த நிலையில், 2வது குழந்தை கிடைக்க இருக்கவும் சீரியலை விட்டு விலகி விட்டார் அந்த இடத்தை ரியா வந்து நிரப்பி கொண்டு இருந்தார். மக்கள் சந்தியாவாக ரியாவை ஏற்றுக் கொள்ளும் சமயத்தில் திடீரென்று அவர் இந்த சீரியலை விட்டு வெளியேறினார்.
இதனால் ரசிகர்கள் ரியாவிற்கு என்ன ஆனது என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக காத்திருந்தார்கள். இந்த நிலையில் பிரபல ஊடகம் ஒன்று ரீதியாக நீங்கள் ராஜா ராணி தொடரிலிருந்து வெளியேறி நீங்கள் என்று கேட்டார்கள்.
அப்போது ரியா நான் சீரியலை விட்டு விலகவில்லை நான் சில காலத்திற்கு வெளிநாட்டிற்கு செல்வேன் என்று கூறினேன். அதற்கு இயக்குனரும் சரி என்று தெரிவித்தார். எனக்கு ஒரே மாதத்தில் 15 முதல் 30 வரையிலான காலத்தில்தான் படப்பிடிப்பு இருக்கும். அதோடு, சீரியலில் கதாநாயகி மாற்றம் தொடர்பாக என்னிடம் கூறவில்லை என்று தெரிவித்து இருக்கிறார்.
இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டதற்கு கம்யூனிகேஷன் சரி இல்லை என்று பதில் அளித்தார்கள். இந்த விஷயத்தை நான் யாரிடமும் தெரிவிக்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார் ரியா.
இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதுடன் இதனை கவனித்த ரியாவின் ரசிகர்கள் சீரியல் தொடர்பாக தவறான முடிவு எடுத்து விட்டார்கள் என்று கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.