fbpx

நாட்டின் மிக நீளமான கப்பல்… பிப்ரவரி 28-ம் தேதி பயணத்தை நிறைவு செய்ய உள்ளது…!

நாட்டின் மிக நீளமான நதிக்கப்பலான எம்வி கங்கா விலாஸ் பிப்ரவரி 28ம் தேதி திப்ருகாரில் தனது பயணத்தை நிறைவு செய்ய உள்ளது.

பிரதமர் மோடியால் ஜனவரி 13ம் தேதி வாராணாசியில் இருந்து கொடியசைத்துத் துவைக்கிவைக்கப்பட்ட உலகின் மிக நீளமான நதிக்கப்பலான எம்பி கங்காவிலாஸின் பயணம் பிப்ரவரி 28ம் தேதி திப்ருகாரில் நிறைவடைகிறது. இதையொட்டி, கப்பலுக்கு வரவேற்பு நிழ்ச்சியை நடத்த மத்திய துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழிப்போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் இயங்கும், இந்திய உள்நாட்டு நீர்வழித்தட ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்தியாவிலேயேத் தயாரிக்கப்பட்ட எம்பி கங்கா விலாஸ் கப்பலின் இந்தப் பயணத்தை பிரதமர் வாரணாசியில் கடந்த ஜனவரி 13ம் தேதி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். தனது 50 நாள் பயணத்தில், இந்தியா- வங்கதேசம் இடையேயான நீர்வழியிலான 3,200 கிலோ மீட்டர் தூரத்தை இக்கப்பல் கடக்கிறது. இந்தக் கப்பலின், தனது 50 நாள் பயணம் வரும் 28ம் தேதி திப்ருகாரில் நிறைவடைகிறது.

இது பாட்னா சாஹிப், புத்தகயா, விக்ரமஷிலா, டாக்கா, கஜிரங்கா தேசியப் பூங்கா ஆகியவற்றைக் கடந்துள்ளது. தனித்துவமான வடிவம் கொண்ட இந்திக் கப்பலில் 36 சுற்றுலாப் பயணிகளும் பயணிக்கின்றனர்.

Vignesh

Next Post

வங்கியில் வேலை வாய்ப்பு...! டிகிரி முடித்த நபர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு...!

Sun Feb 26 , 2023
பாரத ஸ்டேட் வங்கி மியூச்சுவல் ஃபண்ட் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Relationship Manager பணிகளுக்கு என ஒரு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயது வரம்பு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் பட்ட படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் […]

You May Like