fbpx

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்..!! கள்ள ஓட்டு பதிவு..!! உடனே மாத்துங்க..!! அதிமுக பரபரப்பு புகார்..!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தேர்தலில் அதிமுக, காங்கிரஸ், தேமுதிக, நாம் தமிழர் என 77 பேர் வேட்பாளராக களத்தில் உள்ளனர். இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், பொதுமக்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவடைந்ததும் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையமான சித்தோடு அரசு என்ஜினீயரிங் கல்லூரிக்கு இன்று மாலை கொண்டு செல்லப்படவுள்ளது.

இந்நிலையில், வாக்குப்பதிவின் போது அடையாளத்திற்காக விரலில் வைக்கப்படும் மை தரமானதாக இல்லையென புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக அதிமுக முன்னாள் எம்எல்ஏவும் தேர்தல் பிரிவு துணை செயலாளருமான இன்பதுரை தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் வாட்ஸ் அப் மூலம் புகார் தெரிவித்துள்ளார். அந்த புகாரில், வாக்களித்ததன் அடையாளமாக விரலில் வைக்கப்படும் மை யின் தரம் மோசமாக இருப்பதாகவும்,  இதன் காரணமாக கள்ள ஓட்டுக்கு வழிவகுக்கும் என குறிப்பிட்டுள்ளார். எனவே தரமற்ற மையை மாற்ற வேண்டும் என இன்பதுரை வலியுறுத்தியுள்ளார்.

Chella

Next Post

பிறந்து சில மணி நேரங்களில் ஆன பெண் குழந்தை தொப்புள் கொடியை கூட குப்பைத் தொட்டியில் வீச்சு…..! திருச்சி அருகே பயங்கரம்…….!

Mon Feb 27 , 2023
குழந்தைகளே இல்லை என்று எத்தனையோ தம்பதிகள் தவமாய் தவமிருந்து வரம் வாங்கி குழந்தைகளை பெற்றெடுக்கிறார்கள். ஆனால் தங்களுக்கு கிடைத்த குழந்தை செல்வங்களை ஒரு சிலர் துச்சமாக எண்ணி அவற்றை குப்பை தொட்டிகளில் வீசிச் செல்கிறார்கள். அப்படி ஒரு சம்பவம் தான் திருச்சி அருகே நடைபெற்றுள்ளது. திருச்சி மாவட்டம் லால்குடியை எடுத்துள்ள புள்ளம்பாடி அருகே கல்லகம் கிராமத்தில் இருக்கின்ற குப்பை தொட்டி ஒன்றில் ஒரு குழந்தையின் அழுகுறல் கேட்டிருக்கிறது. அந்த வழியாக […]

You May Like